தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (20.03.2024): இதெல்லாம் நிறைவேறுமா?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (20.03.2024): இதெல்லாம் நிறைவேறுமா?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Mar 20, 2024, 05:15 AM IST

google News
Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 20) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 20) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 20) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

மேஷம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும்.

கன்னி

குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில தனவரவுகள் சாதகமாகும். இழுபறியான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

துலாம்

துலாம் ராசியினரே இன்று உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

தனுசு

எதிலும் முன்கோபம் இன்றி செயல்படுவது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும்.

மகரம்

எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.

மீனம்

சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி