Today Rasipalan (02.06.2024): இன்று யோகம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரை.12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Jun 02, 2024, 05:00 AM IST
Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூன் 2) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
மிதுனம்
துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும்.
கடகம்
தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் அகலும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.
சிம்மம்
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும்.
கன்னி
மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். தனவரவுகள் திருப்தியாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும்.
துலாம்
திடீர் தனவரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களை முன்நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும்.
விருச்சிகம்
வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செலவு உண்டு.
தனுசு
பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்
தடைகள் விலகும். எதையும் செய்துமுடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.
கும்பம்
நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வெற்றி நிச்சயம்.
மீனம்
சிந்தனைகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்