தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (09.01.2024): 'தடைகள் விலகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (09.01.2024): 'தடைகள் விலகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil

Jan 09, 2024, 05:20 AM IST

google News
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 09ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 09ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 09ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

மேஷம்

எதிலும் பொறுமை வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். மறதியால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். தன்னம்பிக்கை மேம்படும். செலவு நிறைந்த நாள்.

மிதுனம்

கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.

கடகம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும்.

சிம்மம்

குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைகள் சாதகமாக அமையும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களால் மன அமைதி உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும்.

கன்னி

புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும்.

துலாம்

உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.

விருச்சிகம்

குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். திட்டமிட்ட பயணங்களில் காலதாமதம் உண்டாகும். தடைகள் விலகும் நாள். 

தனுசு

தொழிலில் மாற்றமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வழியில் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கவனம் வேண்டும்.

மகரம்

குடும்ப பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உண்டாகும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்பம்

குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலம் குறையும்.

மீனம்

புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். பணவரவு தாமதாகும். குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி