Today Rasipalan (05.01.2024): 'திடீர் செலவு..ஆரோக்கியத்தில் கவனம்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் !
Jan 05, 2024, 05:20 AM IST
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் ஜனவாி 05ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
புதுவிதமான சிந்தனை ஏற்படும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் நட்பு ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
ரிஷபம்
சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதளவில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம்
சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிம்மம்
திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும்.
கன்னி
எதிர்கால முதலீடுகள் மேம்படும். திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தனவரவுகளின் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும்.
துலாம்
மனம் விட்டு பேசுவதால் அமைதி உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படவும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கனிவான பேச்சுக்களின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள்.
விருச்சிகம்
தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும்.
தனுசு
வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.
மகரம்
தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்
பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனை மனதளவில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
மீனம்
திடீர் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்