Today Rasipalan(22.02.2024): 'செலவு அதிகரிக்கும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Feb 22, 2024, 04:45 AM IST
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
செலவு அதிகரிக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சரிவை செய்வீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும்.
ரிஷபம்
பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும்.
மிதுனம்
அலுவலகத்தில் மதிப்பு உயரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும்.
கடகம்
மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உறவுகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை தேவை. வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சிம்மம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகம் தேவை.
கன்னி
தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும்.
விருச்சிகம்
வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.
தனுசு
உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வாக இருக்கவும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும்.
மகரம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
நெருக்கமானவர்களின் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.
மீனம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்