தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (06.04.2024): ஆசைகள் நிறைவேறும்.. குழப்பம் விலகும்..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (06.04.2024): ஆசைகள் நிறைவேறும்.. குழப்பம் விலகும்..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Apr 06, 2024, 05:45 AM IST

google News
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 06) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 06) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 06) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சனியன்று எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்க ஜாதகத்தில் சனி தோஷங்கள் நீங்கும் தெரியுமா!

Dec 21, 2024 01:36 PM

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் தெளிவு ஏற்படும். ரகசியமான சில முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே இன்று நீங்கள் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

கடகம்

தவறிய சில பணிகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எல்லா விஷயத்திலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும்.

கன்னி

இன்று நீங்கள் மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும்.

துலாம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே இன்று திடீர் செலவுகளால் உங்களுக்கு சேமிப்பு குறையும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். வீடு மற்றும் வாகனங்களை சரி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.

தனுசு

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும்.

மகரம்

வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். குழப்பம் நீங்கும் நாளாக இருக்கும்.

கும்பம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மீனம்

வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகள் நிறைவேற்றுவீர்கள். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும்  / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி