தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அம்மை நோய் போக்கும் வீரபாண்டி கௌமாரி அம்மன்!

அம்மை நோய் போக்கும் வீரபாண்டி கௌமாரி அம்மன்!

Aug 28, 2022, 06:15 PM IST

google News
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

தேனியில் இருந்து கம்பம் செல்லும் பாதையில் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் கோயில். வீரபாண்டி மன்னன் மதுரையில் ஆட்சி செய்தபோது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களின் ஒளியை இழக்க நேரிட்டதாகவும் பின்னர் சிவனை நோக்கி தவம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்

Dec 22, 2024 04:31 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:28 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:20 PM

2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!

Dec 22, 2024 02:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

பின்னர் சிவனின் ஆணைப்படி கௌமாரியம்மனை வழிபட்டு பார்வை பெற்றதாகும். அதற்குப் பரிகாரமாக இந்த கோயிலை கட்டியதாகவும் கூறுகிறது தல வரலாறு. இந்த கோயிலில் அம்மன் கன்னி தெய்வமாக காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்கள் ஒன்றாக கருதப்படுகிறது.

கண் நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனை தூய உள்ளத்துடன் வணங்கி தீர்த்தம் பெற்று சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. இந்த கோயிலின் முன்பு கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது.

இதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தடிமண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடப்படுகிறது.

பின்னர் மகா மண்டபம் உள்ளது. இந்த மகாமண்டபத்தில் கடந்து முன் செல்லும்போது கருவறையில் நமக்கு அன்னை கெளமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார். பிரகாரத்தை சுற்றிவரும்போது தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வமும் வடக்கே நவகிரக மண்டபமும் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22 ஆவது நாள் 8 நாட்கள் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது.

இதில் கொடியேற்றம் நடந்தால் முதல் 21 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21 நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டுமே படைக்கப்படும். திருமண யோகம், நோய்களுக்கு நிவாரணம், வேலை வாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் பரவசமடைகின்றனர். வேண்டிய வரம் கிடைத்தவுடன் அக்னி சட்டி எடுத்து ஆயிரம் கண் பானை சுமந்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை குணமாக வேண்டுபூர் சேற்றை உடலில் பூசி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

அடுத்த செய்தி