Jagannatha Perumal: நாகதோஷம் நீங்க சிறப்பு வழிபாடு!
Nov 06, 2022, 07:02 PM IST
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
ராமநாதபுரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில். சீதையை இலங்கையில் இருந்து மீட்பதற்காக வந்த ராமபுரம் நிறைந்த இடத்தில் படுத்து உறங்கியதால் திருப்புல்லனை என்றும் அதுவே காலப்போக்கில் மருவை திருப்புல்லாணி என பெயர் வந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
இங்குள்ள ஆதி ஜெகநாதர் பெருமாள் சமேத பத்மாசனி தாயார் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44ஆவது ஆலயமாக விளங்குகிறது. கோயிலில் ஆதி ஜெகநாதர் பெருமாள் பத்மாசனித்தாயார் ஆண்டாள் தர்ப்பசையண ராமர் பட்டாபிஷேக ராமர் ஆழ்வார்கள் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
தசரத மன்னர் குழந்தை பெற வேண்டி இந்த கோயிலில் வழங்கப்பட்ட பாயசத்தை பரவியதால் ராமர் பிறந்ததாக ஐதீகம். எனவே இந்த ஆலயத்தில் வழங்கப்படும் பாயசத்தை பருகினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சொர்க்கவாசல் திறப்பின் போது ஆதி ஜெகநாத பெருமாள் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இங்குள்ள சக்கர தீர்த்த குலத்திலும் பக்தர்கள் புனித நீராடி செல்கிறார்கள். அரச மரத்தை தல விருட்சமாக கொண்டுள்ள இந்த ஆலயத்தில் நாகதோஷம் நீங்கவும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.