Amirthakadeswarar Temple: விநாயகரின் திருவிளையாடல் கண்ட தலம்!
Oct 31, 2022, 07:40 PM IST
திருக்கடையூர் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் ஆலயம் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூர் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அமிர்தமே லிங்கமாக மாறியதால் அமிர்தகடேஸ்வரர் என்ற நாமத்தில் இவ்விடம் உள்ள ஈசன் அழைக்கப்படுகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
ஈசனை வகைபட்டால் எம பயம் நீங்கி ஆயுள் தோஷம் ஏற்படாது என்பது ஐதீகம். அபிராமி பட்டருக்காக அம்பாள் தை அமாவாசை என்று தன் காதணித் தோட்டத்தை நிலவாக மாற்றி ஒளிரச் செய்ததாக கோயில் வரலாறு கூறுகின்றது எந்த ஒரு சுப காரியத்தையும் முதலில் விநாயகரை வழிபட்டு செய்துவிட்டுதான் அனைத்து வழிபாடுகளும் சுப காரியங்களும் நடைபெறும்.
அப்படி விநாயகர் வழிபாடு செய்யாவிட்டால் எந்த சுப காரியமும் ஏதோ ஒரு வகையில் தடைப்படும். தேவர்களுக்கு பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை விநாயகரை வேண்டாமலே திருமாலும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அதன் காரணமாக விநாயகர் கோபமடைந்து அமிர்த குணத்தை திருடி கொண்டு வந்து வில்வாரணியும் என்று அழைக்கப்படுகின்ற வில்வமர கார்டுகளின் மையத்தில் மறைத்து வைத்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.
பிறகு திருமாலும், தேவர்களும் மனம் வருந்தி விநாயகரை வேண்ட அமிர்தம் திரும்பவும் கிடைத்தது. ஆனால் அதனை தொட்டவுடன் அந்த அமிர்தமானது லிங்கமாக மாறியது. அமிர்தத்தை மறைத்து திருவிளையாடல் செய்த காரணத்தினால் வில்வாரண்ய திருக்கடவூர் கள்ள வாரண விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
இவரை வணங்கினால் தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆயுஷ் ஹோமங்கள் செய்பவர்கள் முதலில் இவரை வணங்கிய பின்னரே மற்ற வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம். ஆயுஷ் ஹோமம் மட்டுமல்லாது அனைத்து சுப காரியங்களுக்கும் முதலில் விநாயகரை வழங்கிய பின்னரே சுப காரியங்கள் நிகழ்த்தப்படும். ஈசனின் சன்னதிக்கு வலப்புறத்தில் நந்திக்கு அருகே உள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள் புரிகின்றார் கள்ள வாரண விநாயகர்.