தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Swamimalai Swaminathaswamy: பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமான்!

Swamimalai Swaminathaswamy: பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமான்!

Dec 04, 2022, 06:48 PM IST

google News
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை தலம் குறித்து இங்கே காண்போம்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை தலம் குறித்து இங்கே காண்போம்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை தலம் குறித்து இங்கே காண்போம்.

சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் உபதேசித்த தலம் இந்த சுவாமிமலை. காவிரி புண்ணிய நதி ஒரு தீர்த்தம் ஆகும். நேத்ர புஷ்கரணி என்ற சொல்ல கூடிய பிரம்ம தீர்த்தம், ஆறு காலமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடிய தேவேந்திரனால் உருவாக்கப்பட்ட வஜ்ரத் தீர்த்தம், பிரம்ம சரவணன், நேத்ர புஷ்கரணி என்று சொல்லக்கூடிய சரவண பொய்கை ஆகிய தீர்த்தங்கள் இங்கு அமைய பெற்றுள்ளது.

சமீபத்திய புகைப்படம்

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

முருக கடவுளான சுவாமிநாத சுவாமி, ஞான காரகனாக இங்கு அருள் பாலித்து வருகின்றார். அவரை தரிசிப்பதால் ஆணவம், கர்வம், மாயை ஆகிய மூன்று மடங்களும் அழிந்து எல்லா ஞானமும் பெறுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாலயத்தில் 60 தமிழ் வருடங்களும் 60 படிகளாக அமைந்துள்ளது. 60 படிகளை ஏறியவுடன் விநாயக பெருமான் இங்கு நேத்ர மகாகணபதி என்ற ரூபத்தில் அருள் பாலித்து வருகின்றார். இங்குள்ள விநாயகர் கண் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

பின்னர் சுவாமியினுடைய மெய்க்காவலரான இடும்பன் இங்கே தனி சன்னதி கொண்டு காட்சி தருகின்றார். அவரை கடந்து சென்றார் எல்லாம் வல்ல எம்பெருமான் சுவாமிநாதன் ஞான காரகத்தாக சிவசுப்பிரமணிய சுவருபியாக சிவ பீடம் மேலே அருள் பாலிக்கின்றார்.

முதல் பிரகாரத்தில் உற்சவர் சண்முக சன்னதியும், சித்தர்களில் உயர்ந்தவராகவும் குருவத்தில் சிறியவருமான அகத்தியரும் பக்தர்களுக்கு காட்சி புரிகின்றனர். இகோயிலில் தலவிருட்சம் நெல்லிமரமாகும். அப்பனுக்கு பாடம் சொல்லித் தந்த சுப்பையா என்பதால் சுவாமிநாதன் என்ற நாமத்தில் இங்கு முருகப்பெருமான் அழைக்கப்படுகின்றார்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முடியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறை பிடித்தார் பின்னர் அவரது படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே செய்து வந்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற முருகனின் கூற்றுப்படி சிவபெருமான் கேட்டுக்கொண்டதால் பிரம்மனை விடுவித்தாராம்.

பிரணவ மந்திரத்தின் பொருள் அறிய முருகன் முன்பு சிவபெருமான் வாய் பொத்தி மண்டியிட்டு மாணவனாக ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் அறிந்த தலமே இந்த திருத்தலம்.

இங்கே வைகாசி விசாக உற்சவம் என்று சொல்லக்கூடிய சுவாமிக்கு பூணூல் அணிதல் ஆகியவையுடன் முக்கிய நிகழ்ச்சியாக கந்தசஷ்டி திருவிழா அபிஷேகமும் நடைபெறுகின்றன. பின்பு வீரர்கள் படைச்சூழ கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள அம்பாள் பீடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியுடன் சூரசம்ஹார விழாவும், மறுநாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை தீப திருவிழாவின் சிறப்பாக அன்றைய தினம் இக்கோயிலின் தேரோட்டமும் நடைபெறுகின்றது.

அடுத்த செய்தி