தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venugopala Swamy: திப்புசுல்தான் காலத்து கோயில்!

Venugopala Swamy: திப்புசுல்தான் காலத்து கோயில்!

Dec 07, 2022, 12:57 PM IST

google News
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயில் குறித்து இங்கே காணலாம்.
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயில் குறித்து இங்கே காணலாம்.

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயில் குறித்து இங்கே காணலாம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையில் இருக்கிறது பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோயில். சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இது என்பது சிறப்பு. இதன் முன்பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இது ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர், 80 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சமீபத்திய புகைப்படம்

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.25 யாருக்கு பிஸியான நாளாக இருக்கும் பாருங்க..!

Dec 24, 2024 03:38 PM

இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் உறுதி! டிசம்பரில் பூர்வாஷாத நட்சத்திரத்தில் நுழையும் சூரியன்!

Dec 24, 2024 02:31 PM

அதேபோல் கோயிலின் முதல் பிரகாரத்தின் முன் பகுதியில் 60 அடி உயரமுள்ள கொடிக்கம்பமும் 108 கால் மண்டபம் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரங்கையா என்ற தெலுங்கு பிராமணர் இந்த பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு அதை வழங்கி வந்துள்ளார். ஆனால் மூன்று ஆண்டுகளாக வசூலித்த வரிப்பணத்தை திப்புசுல்தானுக்கு கொடுக்காமல் அதைக்கொண்டு 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது.

கோயிலின் கோயிலின் மூலவரான வேணுகோபால சுவாமி, ருக்மணி சத்தியபாமா சமேதராக காட்சி தருகிறார். இந்த கோயிலில் நின்ற அமர்ந்த மற்றும் சயன கோலத்தில் பெருமாள் காட்சி தருவது எங்கும் இல்லாத சிறப்பு. அதேபோல் மற்றொரு சிறப்பு மோசப்பள்ளி. காஞ்சிபுரம் அடுத்ததாக இந்த கோயிலில் மோட்ச பள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

விஷ பூச்சிக்கால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து மோட்சப் பள்ளியை வழங்கிச் சென்றால் பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம். தேள், குளவி, பாம்பு போன்ற விஷப் பூச்சி கடிக்கு ஆளானோர் இங்கு வந்து கல் சுவரில் காட்சி தரும் மோட்ச பள்ளியை வணங்கி செல்வதை பார்க்க முடியும். சுமார் 600 வருடங்கள் இதேபோல கோயில் சுவர்களில் ஆங்காங்கே மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

பாண்டியர்கள் ஆதிக்கம் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. கோயில் பிரகாரத்தில் சுரங்கப்பாதை உள்ளது. இது பல கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது என்கிறார்கள் கோயிலின் வரலாறு அறிந்தவர்கள்.

கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், ஆரோக்கியத்திற்கு ஏற்றவரான தன்வந்திரி, கல்யாண விநாயகர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள் என ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனி தனி சன்னதி இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த கோயிலில் தினம் தோறும் மதிய வேலையில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோய் நொடிகளை நீக்கி ஆரோக்கியத்தை வழங்கும் தெய்வமாக பக்தர்களுக்கு அருள் தருகிறார் வேணுகோபால சுவாமி.

அடுத்த செய்தி