Azhagu Nachiyamman Temple: பெட்டியில் வந்த அம்மன்!
Dec 26, 2022, 06:50 PM IST
நுனாமரத்தின் அருகே கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கிறது நாச்சியம்மனின் திரு உருவம்.
அகண்ட காவிரியின் கரையோரமாக இருந்து காவிரியின் வெள்ளப்பெருக்கில் இருந்து காலங்காலமாக முசிறி நகரை பாதுகாத்து வருகிறாள் அருள்மிகு அழகு நாச்சியம்மன் கோயில். கோயிலின் நுழைவு வாயிலில் நுனாமரத்தின் அருகே கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கிறது அம்மனின் திரு உருவம்.
சமீபத்திய புகைப்படம்
வடக்கு பார்த்த கோயிலின் வாசலில் கருவறையை நோக்கி பார்த்தபடி குதிரையின் மீது அமர்ந்திருக்கிறார் மதுரை வீரன். கோயிலின் வலது புறத்தில் பெரியாண்டவர், இடது புறத்தில் காத்தவராயன், காமாட்சியம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.
மேலும் நுனாமரத்தால் முத்தையா, வணங்காமுடி கருப்பு, ஆதி அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். கருவறையில் சப்த மாதர்களும், வலதுபுரத்தில் அய்யனார் மேற்கு முகமாகவும், இடது புறத்தில் விநாயகர் கிழக்கு முகமாகவும் அமர்ந்து நாடி வருபவரின் மனக்குறைகளை நாள்தோறும் நீக்கி வருகின்றனர்.
இக்கோயிலைப் பற்றி ஒரு மரபு வழி செய்தியும் உண்டு ஒரு முறை காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில் மிதந்து வந்தது ஒரு ஓலை பெட்டி. மிதந்து வந்த அந்த பெட்டியை கரையோரமாக ஒதுங்கியது. அதை இரண்டு வேளாண் குடிமக்கள் பார்த்தனர். இருவரும் சேர்ந்து அந்த பெட்டியை எடுத்தனர்.
அருகில் இருந்த ஒரு கிணற்றின் மீது அந்த பெட்டியை வைத்து திறந்து பார்த்தனர். பெட்டியை திறந்தவுடன் அதிலிருந்து ஏதோ ஒன்று கிணற்றில் குதித்தது. அச்சமயம் கிணற்றில் உள்ளே இருந்து நான்தான் அழகு நாச்சியம்மன் இங்கு குடியேறியுள்ளேன் என்ற குரல் மட்டும் கேட்டது. பெட்டியைத் திறந்த இருவரும் நடந்ததையும் கேட்டதையும் பெரியவர்களிடம் சொல்ல ஊர் மக்கள் ஒன்று கூடி கிணற்றினை பலகை கற்களை கொண்டு மூடி வழிபட்டனர். வடக்கு முகமாக அமர்ந்து அழகு நாச்சியம்மன் அருள்பாலித்து வருகிறார்.