Siva Temple: பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி அடைந்த தலம்!
Nov 20, 2022, 06:32 PM IST
பதஞ்சலி முனிவர் முக்தி அடைந்து இங்கே ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ திருவனந்தீஸ்வரர் முடையார் கோயில் குறித்து இங்கே காண்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள மேலகிடாரம் பகுதியில் அமைந்துள்ளது பழமையான திருவனந்தீஸ்வரர் முடையார் எனும் சிவன் ஆலயம். இங்கு திருவனந்தீஸ்வரர் முடையார் சிவகாமி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
மற்ற சிவாலயங்களில் நந்தி தலைக்கவிழ்ந்து ஆலயத்தை நோக்கி பார்க்கும் வகையில் காணப்படும். இந்த கோயிலில் மட்டும் நந்தியானது சிவனை நோக்கி நேரடியாக தலையை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கும் வடிவத்தில் காணப்படுகின்றது.
இது பாண்டிய மன்னர் காலத்தில் நிலம் தானமாக கொடுத்து ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயமாகும். மன்னர் ராஜேந்திர சோழன் காலத்தில் தெற்காசிய நாடுகளில் படையெடுக்கும் பொழுது சுமார் 14 நாடுகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியதால் அதற்கு அடையாளமாக கிடாரம் கொண்ட திருவனந்தீஸ்வரர் முடையார் எனும் ஆலயம் கட்டப்பட்டது.
பதஞ்சலி முனிவர் முக்தி அடைந்து இங்கே ஜீவ சமாதி அடைந்தார். மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வடிவம் நடைபெறுகின்றன.
உடல்நிலை குணமாவதற்கு நந்தி பெருமானை வேண்டிக்கொண்டு அபிஷேகம் செய்தால் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாலயத்தின் சிறப்புகள் அனைத்தும் இங்குள்ள சுவற்றில் எழுத்துக்களாக பொறிக்கப்பட்டுள்ளன.
இங்கு பல்வேறு மரங்கள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது குடும்பத்தின் நன்மைகள், ஒற்றுமைகளில் சிறந்து விளங்க ஆலயத்தில் திருவிளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.