தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Yamadhandeshwarar Temple: எமனுக்கு தோஷம் நீங்கிய தலம்!

Yamadhandeshwarar Temple: எமனுக்கு தோஷம் நீங்கிய தலம்!

Nov 27, 2022, 02:17 PM IST

google News
ஆலகிராமம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் ஆலயம் குறித்து இங்கே காண்போம்.
ஆலகிராமம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் ஆலயம் குறித்து இங்கே காண்போம்.

ஆலகிராமம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் ஆலயம் குறித்து இங்கே காண்போம்.

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆதி கிராமம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எமனுக்கு தோஷம் நீக்கிய சிவபெருமான் எமகண்டீஸ்வரர் என்ற நாமத்தில் இங்கு குடி கொண்டுள்ளார்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

எமனுக்கு தோஷம் நீங்கிய தலமாகவும், சனீஸ்வரர் வணங்கிய தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது. இக்கோயிலானது ஊரின் மத்தியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் பல்லவர் காலத்தை சேர்ந்தவையாகும்.

இக்கோயிலுள் நுழைந்ததும் முதலில் நந்தி அதற்கு நேர் எதிரே மூலவரான எமதண்டீஸ்வரரின் சன்னதி, இடப்புறம் திரிபுரசுந்தரி அம்பாளின் சன்னதி ஆகியவை அமைந்துள்ளது. மேலும் படர்ந்து விரிந்த ஆலமரத்தின் கீழ் ஆண், பெண் நாகங்களும் காட்சி தருகின்றன.

பராமரிப்புகள் இன்றி பழுதடைந்து காணப்பட்ட இவ்வாலயத்தில் ஊர் மக்கள் திருப்பணி செய்யத் தொடங்கிய போது விநாயகர், முருகன், விஷ்ணு தெய்வ திருமேனிகள் கிடைத்தன. இங்கு 75 சென்டிமீட்டர் உயரமும் 40 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய விநாயகர் சிலை தமிழகத்திலேயே மிகவும் பழமையான விநாயகர் சிலையாக கருதப்படுகின்றது.

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் சிலையை விட இக்கோயிலில் உள்ள விநாயகர் மிகவும் பழமை வாய்ந்தவர். இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிக விசேஷமாக நடைபெறுகின்றது. பிரதோஷ காலங்களில் நந்தி பெருமான் சுவாசிப்பதை உணர முடியும் என்று சொல்கின்றனர்.

கருவறையில் இருந்தும் யாரோ நீரில் உள்ளிருந்தும் வித்தியாசமான மூச்சு விடும் ஒளியை போல ஒரு ஒளியை இங்கு வரும் பக்தர்கள் கேட்டுள்ளனர். இந்த எமதண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் வாரத்தின் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முக பாவங்களோடு காட்சி கொடுக்கின்றாள்.

சிவாலயங்களில் நவகிரக சன்னதிகள் அமைந்திருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் இறைவனை சகலதோஷங்களையும் நிவர்த்தி செய்வதால் நவகிரகங்கள் இல்லாத ஆலயமாக இவ்வாலயும் திகழ்கின்றது. இத்தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகின்றது. சதாபிஷேகம், சித்திரை மாதம் மக நட்சத்திரம் அன்று மார்க்கண்டேயருக்கு வரம் அளித்த விழாவும், சோமவார பூஜையும், பிரதோஷமும், மகாசிவராத்திரி விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

அடுத்த செய்தி