Chenkal Maheswaram Temple: உயரமான சிவலிங்கம் கொண்ட தலம்!
Nov 27, 2022, 06:21 PM IST
புற்றுபோல் சுயம்புவாக சிவன் மற்றும் பார்வதி வளர்ந்து வர மக்கள் வேண்டுதல்கள் செய்யத் தொடங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் உதயன் குளக்கரையில் உள்ளது அருள்மிகு மகேஸ்வரம் ஸ்ரீ சிவ பார்வதி கோயில். இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியில் பண்டைய காலத்தில் புற்றுபோல் சுயம்புவாக சிவன் மற்றும் பார்வதி வளர்ந்து வர மக்கள் வேண்டுதல்கள் செய்யத் தொடங்கினர்.
சமீபத்திய புகைப்படம்
வேண்டுதல்கள் தொடர்ந்து நிறைவேறவே அப்பகுதியில் உள்ள மக்கள் மேலும் பூஜைகள் செய்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பின்னர் கோயில் புனரமைக்கப்பட்டு இன்று பெரிய கோயிலாக உருவெடுத்து மக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலின் முன்புறம் கேரள கலை நயத்துடன் செய்யப்பட்டுள்ள இரு யானைகள் மூலவரைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டிருக்கும் நந்தி கோயிலின் உட்புறம் உள்ள சுவர்கள் மற்றும் தூண்களிலும் அமைக்கப்பட்டு இருக்கும் விளக்கு பாவைகள் அழகுற அமைந்துள்ளது. மூலவராகச் சிவனும் பார்வதியும் உப தெய்வங்களாகக் கணபதி, முருகன், நவகிரகங்கள், பிரம்ம ராட்சசி, யோகேஸ்வரர் சன்னதிகளும் காணப்படுகின்றன.
சிவபெருமானும் பார்வதியையும் தரிசிக்கும் வகையில் இக்கோயில் வளாகத்திலேயே உலகிலேயே மிகவும் உயரமான 11.2 அடி சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவலிங்கத்திற்குள் பக்தர்கள் செல்லும்போது குகைக்குள் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லிங்கத்தின் உட்பகுதியில் மனிதனின் ஏழு சக்கரங்களை ஒப்பிடும் வகையில் மூலாதார, சுவாதித்தன, மணிபுர, அனகாத்த, விசுத்தார எனும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
அந்த ஒவ்வொரு நிலையிலும் மனிதனின் நிலைகள், தெய்வ வழிபாடு, நிறங்கள், உடல் உபாதைகள், எந்த உடலின் பாகங்கள் ஒவ்வொரு நிலையிலும் தொடர்புகள் இருப்பது வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள லிங்கத்திற்குப் பக்தர்கள் தங்கள் கைகளில் அபிஷேகம் செய்கின்றனர்.
இந்த எட்டு தலங்களிலும் சிவபுராணப்படி 64 வகையான ரூபங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பரசுராமரால் இந்தியா முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்ட பிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து உள்ளே சென்றால் சுவர்களில் காசிப, அகஸ்திய, அத்திரி உள்ளிட்ட 17 முனிவர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இறுதியாக எட்டாவது தலம் பணி படர்ந்த கைலாய மலையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்குச் சிவ பார்வதி தாமரை மலரிலிருந்து அருள்பாலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகச் சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது.