நெல்லூர் ஶ்ரீ தல்பகிரி ரங்கநாதர் கோயில்!
Jun 09, 2022, 03:49 PM IST
நெல்லூர் ஶ்ரீ தல்பகிரி ரங்கநாதர் கோயிலுக்கு ஆன்மீக பயணம் செல்வோம்.
நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் ரங்கநாயகாபேட்டை, இந்த இடத்தில் அமைந்துள்ளது ஶ்ரீ தல்பகிரி ரங்கநாத கோயில். வடபெண்ணை நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்த கோயில். அடுத்தடுத்து அடுக்கி எழுப்பிய மதில் சுவர் ஆணையத்தின் தொன்மையை அறிவிக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
சத்வ குணத்தின் அடையாளமாக வெள்ளை நிறத்தில் உள்ளது கோபுரம். ரங்கநாத சுவாமி தேவஸ்தானம் என்று சொல்லப்பட்டாலும் இங்கு ரங்கநாதர் மட்டும் இடம் கொள்ளவில்லை.
இங்கு தனிச்சன்னிதியில் இடம் கொண்டிருக்கிறார் ஸ்ரீராமர். திருமலை திருப்பதியில் சன்னதி கொண்டுள்ள வேங்கடவன் இங்கும் எழுந்தருளியுள்ளார். துளசி மாலையில் விருப்பமுடைய பகவானை நின்ற கோலத்தில் இங்கே காணலாம்.
திருவரங்கத்திற்கு அடுத்து அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர் வந்த பெருமாள். ஆழ்வார்களின் பாடல்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இரு மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் இங்கே தரிசிக்கலாம்.
தனிச் சன்னதியில் ரெங்கநாயகி அருள்பாலிக்கிறார். தாயாரை வணங்கிவிட்டு பெருமாளையும் வணங்குங்கள் என்பதை ஆச்சாரியர்கள் காட்டிய வழி.
மூலஸ்தானத்தில் அரவிந்த லோசனாக, சயன மூர்த்தியாக விஷ்ணு காட்சி தருகிறார். பெருமாளையும் தாயாரையும் பிரார்த்தித்தால் நமக்கான அனுக்கிரகத்தை நெல்லூர் ரங்கநாதர் நிச்சயம் அருளுவார் என்பது ஐதீகம்.