தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Perumulai Muthaiya Temple: தொன்மை வாய்ந்த முத்தையா கோயில்!

Perumulai Muthaiya Temple: தொன்மை வாய்ந்த முத்தையா கோயில்!

Sep 06, 2022, 03:44 PM IST

google News
திட்டக்குடி அருள்மிகு பெருமுளை முத்தையா சுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
திட்டக்குடி அருள்மிகு பெருமுளை முத்தையா சுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

திட்டக்குடி அருள்மிகு பெருமுளை முத்தையா சுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருமுளை கிராமத்தில், அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மலைகள், குன்றுகள் எல்லாம் சிவகுமாரன் விளங்கும் உறைவிடம்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.19 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 18, 2024 03:09 PM

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024 02:56 PM

சனி 2025 சரமாரியாக அடிப்பார்.. நேரடி பயணத்தில் சிக்கிய ராசிகள்.. தாறுமாறாக அதிர்ஷ்டம் வரும்

Dec 18, 2024 02:49 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.19 எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்? - ராசிபலன்!

Dec 18, 2024 02:45 PM

மேஷம் முதல் கன்னி வரை.. உங்க ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் எந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெரியுமா?

Dec 18, 2024 12:52 PM

கேதுவின் பெயர்ச்சி.. இந்த ராசிக்களுக்கு பட்ட கஷ்டம் எல்லாம் அகல போகுது.. இனி வெற்றி மேல் வெற்றி தான்!

Dec 18, 2024 11:37 AM

பல காலங்களுக்கு முன்பே விருத்தகிரி என்றும் பழமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தலம் பெருமுளை, சிறு முளை, பூமாலை, செம்மலை எனும் மலைகளாக இருந்து தொன்மை வாய்ந்தது. இந்த ஸ்ரீ வள்ளி தெய்வம் சமேத முத்தையா சுவாமி என்ற திருநாமத்துடன் சுவாமி பக்த கோடிகள் உய்யும் பொருட்டு அமைந்துள்ளார்.

பச்சையம்மன் இடது கையில் குங்குமம் ஏந்தியும், வலது கையில் தாமரைப் பூவும் கொண்டு அருள்பாலித்து அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இங்கு இவர் மயில்வாகனம் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் மட்டும் வெள்ளை யானை ஐராவதம் வாகனமாக அமைந்துள்ளது. திருஉச்சிரவம் என்னும் வெள்ளைக் குதிரையும் இந்த சன்னிதானத்தில் அமையப் பெற்றுள்ளது.

முத்தையா சுவாமி சன்னதி அருகே செம்மலயப்பா, முத்தையா, இராயப்பா, அருவா சம்பா உனை கொண்ட காட்சி, பச்சையம்மன் சன்னதி அதே வளாகத்தில் பேச்சியம்மன், பூங்காளம்மன், காத்தாலம்மன், மருளாளம்மன், சகோதர வீரபத்திர சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளது.

இக்கோயிலின் நுழைவாயிலில் நந்திகேஸ்வரரும், பலிபீடமும் அமைந்துள்ளன. முத்தையா சுவாமிக்கு வலது புறம் முனீஸ்வர சுவாமிகள் அமையப் பெற்றுள்ளனர். அமிர்த குன்று என்று அழைக்கப்படும் ஆழ்கிணறு, இராயப்பா சன்னதி, தொட்டிய தான் சுவாமி சன்னதியும் அமைந்துள்ளது.

அடுத்த செய்தி