சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் பயணம்!
Jun 14, 2022, 01:15 PM IST
பௌர்ணமி நாளில் விஷேசமாக வழிபடப்படும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் என்பது குறித்து இங்கே காண்போம்.
அகத்தியர், போகர், காலங்கிநாதர், புலிப்பாணி, கோரக்கர், சட்டை முனி, தேரையர், ராமதேவர், சுந்தரானந்தர், கொங்கணவர் என்று குறிப்பிடப்படும் 18 சித்தர்களும் தவம் செய்த தலம் சதுரகிரி.
சமீபத்திய புகைப்படம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது இந்த மலைத்தொடர். கிருஷ்ணகிரி, சிவகிரி, சக்திகிரி எனப்படும் நான்கு மலைகளின் நடுவே சஞ்சீவுகிரியில் சுந்தரமகாலிங்கேஸ்வரராக சிவபிரான் எழுந்தருளியுள்ளார்.
சதுரகிரி என்று பொருள்படும் நான்குமலை நடுவே கோயில் கொண்டதால் சதுரகிரி என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த சதுரகிரி ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
ஆனால் செல்லக்கூடிய பாதை அப்படியொன்றும் சுலபமல்ல. கடினமான மலைப்பாதைகள் மழையாலும், வெயிலாலும் வழியெங்கும் சரளைக் கற்கள் கிடக்கின்றன. முறையாக அமைக்கப்பட்ட படிகள் இல்லை அதனால் எளிய பயணம் என்று நினைக்க முடியாதது சதுரகிரி யாத்திரை.
பௌர்ணமி தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. காரணம் சித்தர் வழிபாட்டில் பௌர்ணமி பூஜை மிக விசேஷம். யாத்திரையின் தொடக்கத்திலேயே பேச்சை எமனையும் கருப்பண்ணசுவாமியையும் காணலாம். இவர்கள்தான் இந்த எல்லைக் காவலர்கள்.
மேலே சென்றால் அடுத்து கோரக்கர் குகை என்று சொல்லப்படும் பகுதி. இந்த பாறையின் கீழே இயற்கையே படைத்துள்ள குகை உள்ளது. உள்ளே மிகச் சிறிய லிங்கத் திருமேனியைக் காணலாம்.