தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ujjaini Makali Amman: ஆதிசக்தி உஜ்ஜயினி மகாகாளியம்மன்!

Ujjaini Makali Amman: ஆதிசக்தி உஜ்ஜயினி மகாகாளியம்மன்!

Nov 27, 2022, 11:36 AM IST

google News
ராமரின் நேரடி பார்வையில் அமர்ந்திருந்து உஜ்ஜயினி மகாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
ராமரின் நேரடி பார்வையில் அமர்ந்திருந்து உஜ்ஜயினி மகாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ராமரின் நேரடி பார்வையில் அமர்ந்திருந்து உஜ்ஜயினி மகாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில். ராமர் இலங்கையை விட்டு புறப்பட்டு பல வருடங்களுக்கு பின்பு இலங்கையை சேர்ந்த மக்கள் ஒரு கட்டத்தில் வரலாற்றில் எங்கும் நிகழாது வண்ணத்தில் சுடாத களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட கலசத்தில் இயந்திரம், திருமாங்கல்யம் ,பொட்டு ஆகியவற்றை அடைத்து வைத்து கடல் மார்க்கமாக பார் ஜெலசந்திக்கடலை அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்

Dec 22, 2024 04:31 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:28 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:20 PM

2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!

Dec 22, 2024 02:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

இலங்கையில் அனுப்பிய பச்சை கலசம் ராமேஸ்வரம் பகுதிக்கு கடந்த 400 வருடங்களுக்கு முன்பு மிதந்து வந்துள்ளது. கலசத்தை மீட்ட கோயில் பூசாரி கலசத்தைக் கொண்டு நடந்து வரும்போது அந்த கலசம் நின்ற இடம் தான் உச்சி புள்ளியில் உள்ள நாகாட்சி அம்மன் கோயில்.

பின் அந்த கலசம் அமர்ந்த இடம் தான் தில்லை நாச்சியம்மன் கோயில். சுடாத களிமண்ணால் உருவாக்கப்பட்டு கடலில் மிதந்து வந்த பச்சை கலசத்தை மட்டும் ஆஞ்சநேயர் சன்னதியிலும் பின் உஜ்ஜயினி அம்மனை கடற்கரையோரமான சன்னதி தெருவிலும் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நவராத்திரி திருவிழா கோயிலில் நடைபெறுகின்றன. ஆஞ்சநேயர் சன்னதியில் உள்ள சுடாத களிமண்ணால் உருவாக்கப்பட்டு கடலில் மிதந்து வந்த கலசத்தை உஜ்ஜயினி அம்மனிடம் வழங்கி நவராத்திரி விழாவான இறுதி நாளில் உஜ்ஜயினி அம்மன் ராமேஸ்வரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ராமநாதசுவாமி கோயிலின் எதிர்புறத்தில் ராமரின் நேரடி பார்வையில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார் உஜ்ஜயினி மகாகாளியம்மன்.

அடுத்த செய்தி