Koori Chatha Ayyanar: வெற்றி தரும் கூரிச்சாத்த ஐயனார்!
Nov 12, 2022, 07:25 PM IST
ராமநாதபுரம் கூரிச்சாத்த ஐயனார் கோயிலின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜாக்கள் வழங்கும் ஆலயமாக கூரிச்சாத்த ஐயனார் ஆலயம் இருந்து வந்துள்ளது. போர் வீரர்கள் எல்லைச்சாமியான கூரிச்சாத்த ஐயனாரை வணங்கிவிட்டு போருக்கு புறப்பட்டதாகவும் அப்போரில் வெற்றியும் பெற்றதாகவும் கோயில் வரலாறு கூறுகிறது.
சமீபத்திய புகைப்படம்
இக்கோயிலில் கூரிச்சாத்த ஐயனார், ராக்காச்சி அம்மன் முக்கிய தெய்வங்களாக அருள் புரிகின்றனர். புஷ்பகலா சாஸ்தா, கருப்பண்ணசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களுடன் கூரிச்சாத்த ஐயனார் ராக்காச்சி அம்மன் பொது மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருமணம் நடைபெறுதல், குழந்தை வரம் வேண்டுதல், எதிரிகளிடம் இருந்து குடும்பத்தை காத்தல் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
எல்லையைக் காக்கும் விதமாக ஐயனார் காக்கும் சிலைகளும் மிகப்பெரிய யானைகளில் போர்வீரர்கள் வருவது மற்றும் நடன கலைஞர்களின் அழகிய சிற்பக்கலைகள் அழகூட்டும் வடிவில் உள்ளது. சுற்றுச்சுவர் சின்னமாக இன்னும் விளங்கி வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவு வருகின்றனர்.
ராமநாதபுரம் அரண்மனையையும், தங்களுடைய குடும்பத்தையும் காக்கக்கூடிய எல்லைச்சாமியாய் கூரிச்சாத்த ஐயனார் விளங்கி வருகிறார். நல்ல அமைதியான சூழ்நிலை ஆன்மீக பக்தர்களை ஈர்க்கிறது. கூரிச்சாத்த ஐயனாருக்கு பால், பழம், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தை தரிசிக்க குடும்பத்துடன் வருகின்றனர்.