தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சிறப்புகள்

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சிறப்புகள்

Jul 04, 2022, 06:20 PM IST

google News
ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோவில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோவில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோவில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கும் புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோவில். கருணையில் சிறந்தவர் தாய் அதனால் தான் கருணை மிகுந்த தெய்வம் தாயின் திருவடிவை எடுத்துக் கொள்கிறது அந்த திருவடிவ திருக்கோலங்களில் ஒன்றுதான் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன்.

சமீபத்திய புகைப்படம்

குருபகவான் பாடல் தெரியுமா?.. பண ராகத்தில் விளையாடும் ராசிகள்.. இனி உச்சம் தொடுவது உறுதி!

Dec 05, 2024 07:00 AM

இந்த மூன்று ராசிகளுக்கு பண மழை பொழியும்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 05, 2024 06:10 AM

‘நிம்மதி தேடி வரும்.. பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Dec 05, 2024 05:00 AM

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

ஸ்ரீ புவனேஸ்வரி அன்னையை வணங்கினால் அஷ்டலட்சுமிகளும் திருவருள் செய்வார்கள். வாழ்விலே அனைத்து வளங்களும் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னையை முறைப்படி வழங்க வேண்டும்.

ஸ்ரீ புவனேஸ்வரி அன்னைக்குப் பல கோவில்கள் உள்ளன. புதுக்கோட்டை என்கிற ஊரிலும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அற்புதமான திருக்கோவில் அது. நாட வேண்டிய திருக்கோவில்களில் அதுவும் ஒன்று.

விநாயகர் சன்னதியில் தொடங்கிப் பல சன்னதியில் வணங்கி புவனேஸ்வரி அன்னை சன்னதியில் வணங்கி பலன் பெறலாம். கோவில் அமைக்கும் கலைநயமாக உள்ளது. குடைவரை கோவில் அமைப்பிலே அது உள்ளது.

படிகளில் ஏறிச் சென்று மேல் தளத்தில் உள்ள தெய்வங்களையும் வணங்கலாம். நமது நாட்டிலேயே பல மன்னர்கள் இருந்தனர் என்று சரித்திரத்தில் படிக்கிறோம். இந்த புதுக்கோட்டையிலும் மன்னர்கள் இருந்தனர்.

அந்த மன்னர்களின் வம்சத்திலே வந்தவர்கள் இன்றும் கூட புதுக்கோட்டையில் உள்ளனர். அவர்களின் பூர்வீக அரண்மனையும் உள்ளது. புதுக்கோட்டை மன்னர்கள் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் மீது பெரும் பக்தி கொண்டவர்கள்.

ஸ்ரீ புவனேஸ்வரி அன்னையை வணங்கினால் மகிழ்ச்சி, வெற்றி, நன்நிறைவு ஆகியவை நிச்சயமாகக் கிடைக்கும். புதுக்கோட்டை மன்னர் அரைக்காசு நாணயத்தில் அன்னையின் திருவடிவம் இடம்பெறுமாறு செய்தார்.

அரைக்காசிலே இடம்பெற்ற அன்னையின் திருவடிவம் என்பதால் அரைக்காசு அம்மன் என்கிற பெயர் இவருக்கு உள்ளது. புதுக்கோட்டைக்கு வருபவர்கள் இந்த ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கும் வரவேண்டும்.

அடுத்த செய்தி