Sengaluneer amman: கண் பார்வை குறைபாடு நீக்கும் செங்கழூநீர் அம்மன்!
Dec 15, 2022, 06:44 PM IST
பௌர்ணமி தினத்தில் செங்கழூநீர் அம்மன் கோயிலுக்கு வந்து தங்கி மனம் உருகி வேண்டுபவர்களுக்கு கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கோயில்களை பொருத்தவரை நாம் பல தல வரலாறுகளை கேட்டிருக்கிறோம். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் புதுமையான கோயில் ஒன்று உள்ளது. மரக்கட்டையை தெய்வமாக வணங்கி வருகின்றனர் பக்தர்கள்.
சமீபத்திய புகைப்படம்
சுயம்புவார்கள் லிங்கம் எழுந்தருளியதிலிருந்து குழந்தையாக காட்சியளித்து பின் கனவில் வந்து தன்னை பற்றி கூறி தெய்வங்களாக பலர் அருள்பாளித்து வருகின்றனர். ஆனால் மரக்கட்டையில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அம்மனாக வீற்றிருக்கும் செங்கழுநீர் அம்மன் குறித்து இங்கே காண்போம்.
புதுச்சேரி வீரா பட்டினம் பகுதியில் செங்கழுநீர் ஓடைக்கு சென்று மீன்பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வலை வீசியபோது கிடைத்த உருண்டையான மரக்கட்டையை பிளக்க முயன்ற போது கோடரி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வந்துள்ளது.
இதனை அடுத்து மரக்கட்டளையை சந்தனம் குங்குமம் விட்டு பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. அம்மன் கனவில் கூறியபடி திருவுருவை விக்ரகமாக பிரதிஷ்டை செய்து மரத்துண்டை பீடமாக அமைத்து அதற்கு செங்கழுநீர் அம்மன் என்ற நாமம் ஈட்டு வணங்கி வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்று சக்தி வாய்ந்த கொண்டு விளங்கும் தலங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீரம் பட்டினமே திருவிழா கோலம் போட்டு இருக்கும்.
ஐந்தாம் வெள்ளியன்று தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவான சுனாமியின் போது இக்கோயில் அருகில் அமைந்திருக்கும் கோயில் குளத்தில் நீர் பெருக்கெடுத்ததாகவும், சுனாமியால் ஏற்படவிருந்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதற்கு செங்கழுநீர் அம்மன் அருளை காரணம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
பௌர்ணமி தினத்தில் இங்கு வந்து தங்கி மனம் உருகி வேண்டுபவர்களுக்கு கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.