Soleeswarar Temple: எட்டு திக்கும் காட்சிதரும் பைரவர்!
Nov 30, 2022, 12:17 PM IST
எட்டு திசைகளிலும் எட்டு பைரவர் காட்சிதரும் சோளீஸ்வரர் கோயில் குறத்து இங்கே காண்போம்.
எட்டு திசைகளிலும் எட்டு பைரவர் சிவலிங்கங்களைக் கொண்ட சோளீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இறைவனின் அம்சமாகவும் அவதாரமாகவும் இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும்.
சமீபத்திய புகைப்படம்
பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவ தலங்களிலும் வடகிழக்கு பகுதியில் கால பைரவருக்கு என்று தனி சன்னதி அமைந்திருக்கும். காலையில் சிவ பூஜை சூரியனிடம் இருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிகின்றது.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு நடைபெறும். ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவரும் சிவனுடைய அம்சமாக கருதப்படுகின்றார். இந்த சோளீஸ்வரர் கோயில் அஷ்ட பைரவர்களும் பூஜை செய்த இடமாக அமைந்துள்ளது.
அஷ்ட பைரவர்களும் பூஜை செய்யும் காட்சி மூலவரின் பின்னால் புடைப்பு சிற்பமாக காணப்படுகின்றது. சோளீஸ்வரர் பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். சம்ஹார பைரவர் என்றும் இவருக்கு மற்றொரு பெயர் உண்டு. மேலும் துர்க்கை, நவகிரகம், சனீஸ்வரன், சூரியன் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் இங்கு உண்டு.
திசைக்கு ஒன்றாக எட்டு திசைகளிலும் 8 பைரவரை தரிசிக்கலாம். பிரம்மாவின் அகந்தையை ஒழித்தவர் சிவனின் அம்சமாக பைரவரையே சாரும். அகந்தையோடு வருபவர்களை அவற்றை நீக்கி நல்வழி காட்டுபவராக இக்கோயிலில் பைரவர் திகழ்ந்து வருகின்றார்.
திருக்கோயிலில் சம்ஹார பைரவர், அசித்தாங்க பைரவர், சனீஸ்வரர், குரு பைரவர், குரோதன பைரவர், புன்வத்த பைரவர், கபால பைரவர், பீஷன பைரவர் என்று எட்டு திக்கிலும் தனித்தனி சன்னதிகளில் எட்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.