Sri Maha Kaliamman Temple: குழந்தை வரம் தரும் காளியம்மன்!
Sep 07, 2022, 07:00 PM IST
![நாமக்கல் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம். நாமக்கல் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.](https://images.hindustantimes.com/tamil/img/2022/09/07/960x540/namakka_1662557361434_1662557364010_1662557364010.png)
நாமக்கல் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
நாமக்கல்லிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலவர் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாகாளி அம்மன் கோயில்.
சமீபத்திய புகைப்படம்
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.18 உங்களுக்கு சூப்பரா இருக்குமா? - ராசிபலன் இதோ!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.18 யாருக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் பாருங்க!
பாபா வங்கா யார்?.. 2025 பேரழிவு கணிப்புகள்.. வரப்போகும் புதிய ஆண்டு எப்படி இருக்கும்?.. நினைச்சாலே நடுங்குது!
மிதுனம், கும்பம், மகரம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.. புதன் பகவனால் சாதகமான பலன்கள் கிடைக்க போகுது!
சிவன் கரம் பிடித்த ராசிகள்.. சனி கூட உங்களை தொட முடியாது.. உங்களை தொட்டால் அவர்கள் காலி!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.17 காதல் வாழ்க்கை யாருக்கு சாதகமாக இருக்கும்!
ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளே சென்றால் புற்றுடன் நாகப்பாம்பு தெய்வமும் இடது புறம் சிறியதாகச் சிவலிங்கமும் அங்கு அமைந்துள்ளன.
காளியம்மனுக்கு நேராகச் சிங்கம் காட்சி தருகிறது. இதனையடுத்து கோயில் கருவறையில் மண் திட்டாலான காளியம்மனும், பெரிய காளியம்மனும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
மேலும் கோயிலின் வளாகத்தின் வலது புறம் சுமார் 32 அடி உயரத்தில் அரக்கனை வதம் செய்வதற்குப் புறப்படத் தயாராக இருக்கும் ஸ்ரீ மகாகாளி அம்மன் உருவச் சிலை காணப்படுகிறது.
திருமணமான பெண்கள் குழந்தை வரம் கேட்டு கோயிலின் பின்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாக கன்னியம்மனை தரிசனம் செய்து வழிபட்டு அருகில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனப் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. அன்றைய திருவிழாவின் நள்ளிரவு எருமை கிடா பலி கொடுக்கும் பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்ரீ மகாகாளி அம்மனை நினைத்து வழிபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேறினால், அம்மனுக்கு ஆலயத்தில் மணிக்கட்டியும், வேல், ஈட்டியும் நேர்த்திக்கடனைப் பக்தர்கள் செலுத்துகின்றனர்.