தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Uchishta Ganapathy: தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் கணபதி!

Uchishta Ganapathy: தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் கணபதி!

Jan 05, 2023, 05:39 PM IST

google News
800 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
800 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

800 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் மூலபரான விநாயகர் பெருமான் நீல சரஸ்வதி தன் மடியில் அமர்த்தி வைத்தபடி காட்சி தருகின்றார். தனது 32 தோற்றங்களில் எட்டாவது படிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இந்த தலத்தில் விநாயக பெருமான் அருள் பாலித்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

குரு செம குத்தாட்டம்.. இந்த ராசிகள் என்ன செய்தாலும் மாறாது.. உங்க ராசி என்ன?.. வந்து பாருங்க..!

Nov 30, 2024 10:49 AM

மேஷம், ரிஷம், மிதுனம், சிம்மம், கும்ப ராசியினரே எச்சரிக்கை.. எல்லாமே சிக்கல் தான்.. செவ்வாய் சிரமம் தரலாம்!

Nov 30, 2024 10:10 AM

மாடி வீடுகளை வாங்கும் ராசிகள்.. பணத்தில் குளிப்பாட்டப் போகும் கேது.. 2025 உங்களுக்கு உச்சம்தான்

Nov 30, 2024 06:00 AM

‘நிதானம் முக்கியம்.. நிம்மதி நிரந்தரம்.. நடுக்கம் வேண்டாம்.. நல்லதே நடக்கும்’ மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன் இதோ!

Nov 30, 2024 05:00 AM

’5 ரூபாய் நாணயத்தை கொண்டு வீட்டில் பணம் கொட்ட வைக்க முடியுமா?’ செல்வம் சேர்க்கும் குபேர வழிபாடு!

Nov 29, 2024 07:38 PM

நாளை அஸ்தமன ஆட்டத்தை ஆரம்பிக்கும் புதன்.. டிசம்பர் முதல் பணம் கொட்டும் 3 ராசிகள்.. இனி முன்னேற்ற பாதை

Nov 29, 2024 05:33 PM

சுமார் 800 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் சில ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய ஆலயமாக இவ்வாலயம் விளங்குகின்றது. இக்கோவிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சேஷ்ட கணபதிகள், கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை சமீது சுப்ரமணியர், ஸ்வர்ண ஆகர்ஷர்ண பைரவர் ஆகியோருக்கு தனித்தனியே சன்னதிகள் காணப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் ரிஷி தீர்த்தம், ருத்ர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்களும் வன்னி மரமும், பனை மரமும் இரண்டு தல விருட்சங்களாக காணப்படுகின்றது.

ஒருமுறை வித்யாகரன் என்று அரக்கன் பிரம்மாவை நினைத்து கடும் தவம் புரிந்த போது அவனுக்கு காட்சி தந்த பிரம்மாவோ என்னை போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ மிருகமாகவோ இருக்கக் கூடாது என்றும் நகர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும் .

அந்த சமயம் அவன் தன்னுடைய மனைவியுடன் இணைந்து கோலத்தில் இருக்க வேண்டும். தன்னை யாரும் அழிக்க முடியாத அரிய வரத்தை கேட்ட வித்யாகரனுக்கு பிரம்மாவோ கேட்ட வரத்தை வழங்கினார். வித்யாகரன் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் அடிமைப்படுத்தி அவர்களுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்துள்ளார்.

துன்பப்பட்ட மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மனதில் நினைத்து மிகப் பெரிய தியாகத்தை நடத்தினர். யாகத்தின் முடிவில் யாக தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிபட்டார் விநாயகர்.

அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டல் முனிவர்கள் வேள்வி நடத்த, அதிலிருந்து பிரம்மாவின் மகளான நீல சரஸ்வதி வெளிப்பட்டார். விநாயகருக்கு நீல சரஸ்வதி தேவியை நவமி திதியில் திருமணமும் முடித்து வைத்தனர்.

உச்சிஷ்ட கணபதி தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமரச் செய்து தன் இரு கைகளால் அனைத்து வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து அதே கோலத்துடன் பாசம் அங்குசம் இருக்கும் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியபடி இருந்த விநாயகரரைக் கண்டார் வித்யாகரன் .

அவருடைய ஒளி கதிர்வீச்சு தாங்காமல் நாக்கை கடித்துக் கொண்டு வலியால் துடித்து உயிரிழந்ததாகவும், வித்யா கரன் வாங்கிய வரத்தின் படியே ஆசிரியர்களும் தேவர்களும் ஓடிய சபையில் உச்சிஷ்ட கணபதி யாருடைய உதவியும் இல்லாமல் தேவியுடன் இருக்கும் போது அவருடைய பார்வையினால் அவனை வதம் செய்தார்.

உச்சிஷ்ட கணபதி மூலவராக மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் இவ்வாலயத்தில் காட்சி தருகின்றார். கோபுரத்தின் முன்புறமும் பின்புறமும் 16 வகையான விநாயகர், முருகர் அமர்ந்தும் நின்ற கோலங்களிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

அடுத்த செய்தி