தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venkatachalapathi Temple: கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டிய கோயில்

Venkatachalapathi Temple: கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டிய கோயில்

Dec 31, 2022, 07:31 PM IST

google News
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் போரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த வெங்கடாஜலபதி திருக்கோயில். இக்கோயிலானது 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

இது 110 அடி உயரத்தில் 5 நிலை வானளாவிய ராஜகோபுரம் கருங்கல்லினால் திருச்சுற்று மதில்களும் சூழப்பட்டு விசாலமான நாயகர் கட்டிடக்கலைப் பணியில் அழகுற அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் வெங்கடாச்சலபதி உருவம் நான்கடி உயரத்தில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உற்சவரான சீனிவாசனும் மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளை காணலாம். இவை உலகப் புகழ் பெற்றவை.

ஆடை அணிகலன்கள் தத்ரூபமாக இந்த சிற்பங்களில் காணப்படுகின்றன. கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாக தெரிகின்றன. சிற்பக் கலைக்கு இத்தலம் பெயர் பெற்றதாகும். இவ்விடம் உள்ள ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கி உள்ளன.

தட்டினால் ஓசை எழும்பும் இசை தூண்களவை. தல விருட்சமாக புன்னை மரம் காணப்படுகிறது. புரட்டாசி மாத பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் பக்தர்கள் பெருமளவு இந்த தலத்திற்கு வருகை புரிகின்றனர். திருமண தடை நீங்க, பிள்ளை பேறு கிட்ட இங்கு அனுதினமும் பக்தர்கள் வேண்டி செல்கின்றனர்.

அடுத்த செய்தி