தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vanadurkaiyamman Temple: குலதெய்வம் இல்லாதவர்களுக்கு இதுவே தெய்வம்!

Vanadurkaiyamman Temple: குலதெய்வம் இல்லாதவர்களுக்கு இதுவே தெய்வம்!

Nov 15, 2022, 07:14 PM IST

google News
கதிராமங்கலம் வனதுர்க்கையம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்.
கதிராமங்கலம் வனதுர்க்கையம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்.

கதிராமங்கலம் வனதுர்க்கையம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களுக்கு தொடர்ந்து துன்பங்களை தந்து கொண்டிருந்த அசுரர்களை அழிக்கவும் இடைவிடாது போதித்த மும்மூர்த்திகளின் துன்பங்களை போக்கவும் எடுத்த அவதாரமே மனதுர்க்கை அவதாரமாகும்.

சமீபத்திய புகைப்படம்

'நிதானம் தேவை..நினைத்தது நடக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Dec 02, 2024 06:45 AM

’மேஷம் முதல் மீனம் வரை!’ சாதூர்யம்! அதிகாரம்! செல்வம் தரும் கூர்ம யோகம் யாருக்கு?

Dec 01, 2024 08:50 PM

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ நாளை டிச.02 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Dec 01, 2024 08:21 PM

துலாம் முதல் மீனம் ராசி வரை.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:59 AM

சுக்கிரன் பெயர்ச்சி..மேஷம் முதல் கன்னி ராசி வரை..இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:30 AM

குரு 2025-ஆம் ஆண்டு வரை விடமாட்டார்.. சொல்லி அடித்த போகும் ராசிகள்.. இவர்கள் இனிமேல் கில்லி தான்

Dec 01, 2024 07:15 AM

தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கென தனி சன்னதி இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது. பொதுவாக கோயில்களில் துர்க்கை அம்மன் வழக்கு அல்லது தெற்கு நோக்கியே காட்சி தருவார். ஆனால் இங்குள்ள துர்கை கிழக்கு நோக்கி அமர்ந்து காட்சி அளிக்கிறார். அம்மனின் வலது கை சாய்த்து அபயகஸ்தம் வரதம் என இரண்டு முத்திரைகளை காட்டி அருள் பாலித்தது வேறு எந்த கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

நுழைவாயிலின் இருபுறங்களிலும் துவார பாலகிகள் உள்ளன. எல்லா கோயில்களிலும் உள்ள விநாயகர், முருகன் சிலைகள் இங்கு கிடையாது. அனைத்து நாட்களிலும் ராகு காலத்தில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

சித்திரை ஆடி மாதங்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம். குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகமும், எதிரிகளின் தொந்தரவு நீங்க குங்கும காப்பு சாட்சியும் செவ்வரளி அர்ச்சனை செய்தும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் திருமண தடைகள், குடும்ப பிரச்னைகள் நீங்குவதுடன் காரியங்கள் சுத்தி அடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.

அடுத்த செய்தி