தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karaneeswarar Temple: அனுமன் வழிபட்ட காரணீஸ்வரர் கோயில்!

Karaneeswarar Temple: அனுமன் வழிபட்ட காரணீஸ்வரர் கோயில்!

Aug 30, 2022, 06:49 PM IST

google News
அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் வழியில் காக்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் ஆலயம்.

சமீபத்திய புகைப்படம்

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

குரு கூலி கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் அம்பானியாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.. நீங்க என்ன ராசி?

Dec 04, 2024 10:08 AM

பழங்காலத்தில் காக்கா சூரண பட்டணம் என அழைக்கப்பட்ட இப்பகுதியைக் காக்கா சூரன் என்ற அசுரன் ஆட்சி புரிந்து வந்ததாகவும், ராமாயண காலத்தில் லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு சென்ற போது அவரை தடுப்பதற்காகவே இராவணனின் நண்பரான காக்கா சூரன் 108 சிவலிங்கங்களை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து அனுமனை வழிபட முயற்சி மேற்கொண்டதாகவும், இருப்பினும் காக்கலூரில் உள்ள காரணீஸ்வரரை மட்டுமே அனுமன் வழிபட்டுச் சென்று லக்ஷ்மணனைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகின்றது.

இதனை இன்றளவும் மெய்ப்பிக்கும் வகையில் காக்களூரை சுற்றி பல்வேறு இடங்களில் சிவலிங்கங்கள் இடம்பெற்ற உள்ளது காணலாம். மேலும் இக்கோயிலில் ஈஸ்வரனை வீர அனுமன் வடக்கு நோக்கி வணங்குவது போல அமைந்துள்ளதும் தனிச் சிறப்பாகும்.

இக்கோயிலில் மூலவராக காரணீஸ்வரரும், அம்பாளாக செண்பக வல்லி தாயாரும் உள்ளன. இக்கோயிலின் தல விருட்சமாக அத்திமரம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபடும் பக்தர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு வேண்டுகோளுக்குப் புத்திர பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாலயத்தில் உள்ள சுயம்புலிங்கமாக உள்ள சிவனை நாகம் வழிபட்டதால் ராகு, கேது பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவள்ளூர் செல்லும் பேருந்து மூலம் காக்களூர் செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் திருக்கோவில் அடையலாம்.

அடுத்த செய்தி