Muktheeswarar Temple: முக்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்!
Nov 07, 2022, 07:33 PM IST
திரிபுரசுந்தரி உடனுறை முக்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை முக்தீஸ்வரர் திருக்கோயில். கதம்பவனம் என அழைக்கப்பட்ட இப்பகுதியில் முதலியார் குல மரபினர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள முத்தீஸ்வரர் ஆலயத்தை வழிபட்டு வந்துள்ளனர்.
சமீபத்திய புகைப்படம்
பின்னர் சைவம் சற்று பொலிவு இழந்து சிவாலயத்திற்கு வருவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்ததாகவும் அதனை தீர்க்கும் வகையில் கோயிலில் படிப்படியாக பல திருப்பணிகள் நடைபெற்றதை அடுத்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
முதலியார் குலத்தில் வழிவழியாக வந்தவர்கள் தேவார பாடல்களை பாடி சிவ தொண்டாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது. இப்பகுதிக்கு கதம்பரம் என்ற பெயர் வருவி கடம்பத்தூர் என அழைக்கப்படுகின்றது. இங்குள்ள சிவனாரின் நெற்றியில் மூன்று கோடுகள் உள்ளதை இக்கோயிலின் தனி சிறப்பாகும். திருக்கோயிலில் மூலவராகவும், உற்றவராகவும் அருள்மிகு முக்தீஸ்வர் காட்சி தருகின்றார்.
அம்பாள் திரிபுரசுந்தரி என்ற நாமத்தில் வீற்றிருக்கின்றாள் தல விருச்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இக்கோயிலில் விநாயகர், முருகர், வேணுகோபால சுவாமி பக்த ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணர், சரஸ்வதி, நடராஜர், கஜலட்சுமி பைரவர், வீரபத்திரர், துர்க்கை, மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி மாத உற்சவம், பங்குனி உத்திரம், திருக்கல்யாண உற்சவம், சஷ்டியை தொடர்ந்து சூரசம்ஹாரம், வள்ளி தெய்வானை முருகரின் திருக்கல்யாணம், கோயிலின் விசேஷ நாட்களாக பார்க்கப்படுகின்றன.
இந்த திருக்கோவிலில் உள்ள முக்தீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாளையும் திருமண தடை உள்ளவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் தரிசித்தால் திருமண தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.