HT Yatra: கண்களை மூடிய பார்வதி தேவி.. தங்கையோடு சென்ற விஷ்ணு பகவான்.. காட்சி கொடுத்த நெறிபுரீஸ்வரர்
Jul 14, 2024, 05:45 AM IST
HT Yatra: அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதம்பேட்டை அருள்மிகு நெறிபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நெறிபுரீஸ்வரர் எனவும் தாயார் தர்மாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியாக அனைத்து கோயில்களிலும் காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கூட்டம் இருந்தது.
சமீபத்திய புகைப்படம்
இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கு திரும்பினாலும் தமிழ்நாட்டில் சிவபெருமான் கோயில்கள் இருக்கும்.
மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை சிவபெருமான் பல பக்தர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார். காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர் இன்று வரை பல ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நின்று வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதம்பேட்டை அருள்மிகு நெறிபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நெறிபுரீஸ்வரர் எனவும் தாயார் தர்மாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
தல வரலாறு
பார்வதி தேவியோடு சிவபெருமான் ஒரு முறை தாயம் விளையாட நினைத்துள்ளார். இருவரும் தாயும் விளையாடி சிவபெருமான் பலமுறை தோற்றுள்ளார். ஆனால் தனது தோல்வியை சிவபெருமான் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே பார்வதி தேவி அங்கே அமர்ந்திருந்த விஷ்ணு பகவானிடம் தீர்ப்பு கூறும் படி கூறினார்.
யார் பக்கம் நியாயம் கூறினாலும் ஒருவர் நமக்கு எதிரியாக மாறி விடுவார்கள் என்பதற்காக விஷ்ணு பகவான் நான் ஆட்டத்தை கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பார்வதி தேவி நான் இறைவனின் மூன்று கண்களையும் மூடி விடுவேன் ஒலி குன்றினால் நான் வெற்றி பெற்றேன் என்று அர்த்தம் இல்லை மூன்று கண்களிலும் ஒளி அப்படியே இருந்தால் இறைவன் வெற்றி பெற்றார் என்று அர்த்தம் என மூன்று கண்களையும் பார்வதி தேவி உடனே முடியவில்லை. இதனால் பிரபஞ்சமே இருண்டு போனது.
இதனால் பலரும் அவதிப்பட்டு உள்ளனர். என்ன நடக்கும் என்று தெரியாமல் அகந்தையால் இந்த அகிலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டால் என சிவபெருமான் பார்வதி தேவி மீது கோபப்பட்டுள்ளார். தனது தவறை உணர்த்த பார்வதி தேவி சிவபெருமானிடம் விமோசனம் கேட்டுள்ளார்.
உடனே பூலோகம் சென்று எனது கோயில்கள் அனைத்திற்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என சிவபெருமான் பார்வதி தேவியாரிடம் கூறியுள்ளார். உனக்கு எப்போது ஓய்வு தேவைப்படுகிறது அந்த இடத்தில் எனக்கு பூஜை செய்ய வேண்டும் சரியான நேரத்தில் நான் அங்கு வருவேன் என சிவபெருமான் கூறியுள்ளார்.
பார்வதி தேவிக்கு துணையாக பசுக்கூட்டத்தை மேய்ப்பவனாக விஷ்ணு பகவான் உடன் சென்றார். இருவரும் பல கோயில்களில் சென்று தரிசனம் செய்தனர். இருவரும் ஓய்வு எடுப்பதற்காக ஒரு இடத்தில் தங்கி உள்ளனர். மகாவிஷ்ணுவாக விளங்க கூடிய அச்சுதன் அந்த இடத்தில் தங்கியதால் அந்த இடம் அச்சுதம் பேட்டை என அழைக்கப்படுகிறது.
அந்த இடத்தில் தங்கிய பார்வதி தேவி சிவபெருமானை வணங்கி வழிபட்டுள்ளார். தான் கூறியது போல நெறி தவறாமல் பார்வதி தேவி தவம் செய்ததால் நெறி ஈஸ்வரராக சிவபெருமான் நம்பிக்கைக்கு காட்சி கொடுத்தார். அதன் காரணமாக சிவபெருமான் நெறிபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9