HT Yatra: நோயால் பாதிக்கப்பட்ட அகத்தியர்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கடல் நீரால் அபிஷேகம் கேட்ட தீர்த்தபாலீஸ்வரர்
Jul 26, 2024, 06:30 AM IST
HT Yatra: அந்த காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் காலத்தால் அழிக்க முடியாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. இதுபோன்ற எத்தனையோ கோயில்கள் வரலாறு தெரியாமல் இன்றும் கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: மன்னர்கள் ஆட்சி உருவான காலத்தில் முன்னதாகவே சிவபெருமான் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்துள்ளதாக கூறுகின்றனர். சுயம்புவாக எத்தனையோ லிங்கம் தானாக உருவாக்கி பக்தர்களை காத்து வருவதாக இன்றும் சிவயோகிகள் கூறுகின்றன. மன்னர் ஆட்சி காலத்தில் சிவபெருமான் அனைவருக்கும் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் அமைத்து வழிபாடுகள் செய்து வந்துள்ளனர். இந்தியா முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் சிவபெருமானுக்கு இருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் எதிரிகளாக சண்டை போட்டு வந்தாலும் இவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். போர் ஒரு பக்கம் இருந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்தும் போரை கோயில்கள் கட்டுவதன் மூலம் காட்டி வந்துள்ளனர்.
அந்த காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள்தான் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. இதுபோன்ற எத்தனையோ கோயில்கள் வரலாறு தெரியாமல் இன்றும் கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் தீர்த்தபாலீஸ்வரர் எனவும் தாயார் மகா திரிபுரசுந்தரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரமும் தீர்த்தமாக கடல் தீர்த்தமும் விளங்கி வருகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் திருமண தோஷம், குழந்தை தோஷம் உள்ளிட்டவர்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவனும் அம்பிகையும் இரண்டு அடி உயரத்தில் மிகவும் சிறியதாக காட்சி கொடுத்து வருகின்றனர் சிவபெருமான் சற்று இடதுபுறம் சாய்ந்தபடி காட்சி கொடுப்பார் ஒரு வெள்ளரிப்பழம் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார்.
அகத்தியர் மிகவும் குள்ளமான முனிவராக இருக்கின்ற காரணத்தினால் அவர் பூஜை செய்வதற்காகவே சிவபெருமான் தனது தனது உயரத்தை குறைத்துக் கொண்டார் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. கடல் தீர்த்தத்தைக் கொண்டு இங்கு பிரதானமாக பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தினத்தன்று இங்கு தீர்த்தவாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது மேலும் அன்றைய தினத்தில் சிவபெருமான் கடலுக்குச் சென்று நீராடி விட்டு திரும்பி வருகிறார் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து சிவன் கோயில்களிலும் இருந்தும் முதலில் செல்லக்கூடிய சிவபெருமானாக இவர் விளங்கி வருகின்றார்.
தல வரலாறு
கைலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது வடக்கு பக்கம் தாழ்ந்து தெற்கு பக்கம் உயர்ந்தது. இதனை சமநிலை செய்வதற்காக அகத்தியரை பொதிகை மலை நோக்கி சிவபெருமான் அனுப்பி வைத்தார். சென்று கொண்டிருந்த பொழுது அகத்தியருக்கு உடல்நிலை ஆரோக்கியம் கெட்டுப்போனது. இதனால் ஒரு வன்னி மரத்தடியில் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என அகத்தியர் முடிவெடுத்தார்.
வன்னி மரத்திற்கு அடியில் அமர்ந்தால் நோய் தீரும் என்பது அந்த காலத்தில் நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. உடனே அந்த மரத்தடியில் அமர்ந்து அகத்தியர் சிவபெருமானை நோக்கி தியானம் செய்தார். அந்த இடத்தில் உடனே சிவபெருமான் காட்சி கொடுத்துள்ளார்.
தற்போது இருக்கக்கூடிய வங்காள விரிகுடாவில் நீராடி விட்டு அதன் தீர்த்தத்தை கொண்டு என்னை அபிஷேகம் செய்தால் உனது நோய் நீங்கிவிடும் என சிவபெருமான் அகத்தியர் இடம் கூறியுள்ளார். உடனே அகத்தியர் கடலில் நீராடி விட்டு தனது கமெண்டலத்தில் கடல் நீரை எடுத்து வந்து சுவாமிக்கு பூஜை செய்து வழிபாடு செய்துள்ளார். அதன்பின் அவரது நோய் நீங்கியது. கடல் திருத்தத்தால் தன்னை பூஜை செய்து வணங்கும்படி சிவபெருமான் கூறிய காரணத்தினால் இவர் தீர்த்தபாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அதேசமயம் அகத்தியருக்கு ஏற்பட்ட நோயை சிவபெருமான் நீக்கி வைத்த காரணத்தினாலும் இந்த பெயரால் அழைக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9