HT Yatra: அதிசய நெய் லிங்கம்.. மணியாக மாறிய வாசுகி பாம்பு.. கேட்கும் வரங்களை கொடுக்கும் சிவபெருமான்
Jul 12, 2024, 06:10 AM IST
HT Yatra: தமிழ்நாடு மட்டுமல்லாது தெற்கு பகுதி ஆண்டு வந்த மன்னர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் கோயில்கள் கட்டி உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலத்தில் திருச்சூர் அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்.
HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கொண்டிருக்க கூடிய சிவபெருமான் லிங்கத்திருமேனியாக தனக்கென உருவம் இல்லாமல் அனைத்து கோயில்களிலும் காட்சி கொடுத்து வருகிறார். உலகம் முழுவதும் அதிக கோயில் கொண்ட கடவுளாக இருந்தாலும் இந்தியாவில் அதிகபட்ச பக்தர்களை கொண்டிருக்கிறார் சிவபெருமான்.
சமீபத்திய புகைப்படம்
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது அவரை குலதெய்வமாக வழிபட்டு வருபவர்களும் இருக்கின்றனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
ஒரு பக்கம் நாட்டுக்காக போரிட்டு வந்தாலும் மறுபக்கம் தங்களது கலை நேரத்தோடு கோயில்கள் கட்டி தங்களது பக்தியை மன்னர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் எதிரியாக இருந்தாலும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கலைநயத்தோடு கோயில்களை கட்டி உள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது தெற்கு பகுதி ஆண்டு வந்த மன்னர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் கோயில்கள் கட்டி உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலத்தில் திருச்சூரில் அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் 12 அடி உயரம் கொண்டது. மிகவும் பழமையான இந்த நெய் லிங்கம் எப்போதும் உருகாமல் பாறை போல் இறுகிக் காய்ச்சி கொடுத்திருக்கிறது. இதிலிருந்து எப்போதாவது மெய் வெளிப்படும் அதுவும் உடனே உருகி காணாமல் போய்விடும் என கூறப்படுகிறது. நெய் லிங்கம் என்கின்ற காரணத்தினால் இதற்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.
உருகும் தன்மை கொண்ட நெய் போல இது கிடையாது கோடை காலம், ஆரத்தி காட்டுதல் இதுபோன்ற நேரத்திலும் இந்த நெய் லிங்கம் உருகாமல் இறுக்கமாக காட்சி கொடுக்கும். இந்த லிங்கத்திலிருந்து நெய் மனம் வராது. அனைத்து லிங்கங்களுக்கும் செய்யப்படுவது போல அனைத்து அபிஷேகங்களும் இந்த லிங்கத்திற்கும் செய்யப்படுகிறது பாதுகாப்பு கருவி இந்த லிங்கத்தை சுற்றி பெரிய கவசம் அமைக்கப்பட்டுள்ளது.
அமிர்தம் கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பு இந்த கோயிலில் கர்ப்ப கிரகத்தின் வாசலில் இருக்கக்கூடிய மணியாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிரதோஷ காலங்களில் மட்டும் தலைமை நம்பூதிரிகள் இந்த மணியை அடிப்பார்கள். மற்ற காலத்தில் யாருக்கும் தொடுவதற்கு அனுமதி கிடையாது.
தல வரலாறு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் லிங்கத் திருமேனியாக காட்சி கொடுத்து வருகிறார் குறிப்பாக இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத்தில் அமைந்துள்ள பனிலிங்கம் போல இது நெய் லிங்கம் என அழைக்கப்படுகிறது. அதனால் இதனை தென்கைலாயம் என அழைக்கின்றனர்.
இந்த திருக்கோயில் பெருந்தட்சன் என்பவரின் காலத்தில் நிர்மானம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு நம்புதீர்கள் இந்த கோயிலில் தலைவராக இருந்து கோயிலை நிர்வாகம் செய்து வந்துள்ளனர். அதற்குப் பிறகு கொச்சி ராஜா சக்தன் தம்புரான் என்பவர் இந்த நடைமுறையை ஒழித்து விட்டு பொதுமக்களே நிர்வாகம் செய்யலாம் என ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இவரது காலகட்டத்தில் இந்த கோயிலை சுற்றி தேக்கு மரக்காடு இருந்துள்ளது. அதனை அழிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இதனை அழிக்க வேண்டாம் எனக் கூறி பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த மரங்கள் அனைத்தும் சிவபெருமானின் ஜடாமுடியாக இருந்து வருகிறது எனக் கூறியுள்ளனர்.
அந்த காலகட்டத்தில் இந்த கோயிலில் 41 நாட்கள் திருவிழாக்கள் நடந்து வந்துள்ளது. மக்கள் கூறியும் இந்த காடுகள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு இந்த கோயிலில் இன்று வரை திருவிழா நடத்தப்படவில்லை. சிவபெருமானின் ஜடாமுடிக்காக இருந்த அனைத்து மரங்களும் அழிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் நம்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9