நாகராஜன் வழிபட்ட தலம்.. சுயம்பு மூர்த்தியாக அமர்ந்த சிவபெருமான்.. பிரம்மன் வழிபட்ட நாகநாதர்..!
Oct 30, 2024, 06:00 AM IST
Naganathaswamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரையூர் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகநாதர் எனவும் தாயார் பிரகதாம்பாள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Naganathaswamy: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் இந்தியாவில் இவருக்கு எங்கு திரும்பினாலும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நாயகனாக மிகப்பெரிய கோயில்களில் அமர்ந்திருக்க கூடியவர் சிவபெருமான்.
சமீபத்திய புகைப்படம்
மண்ணுக்காக ஒரு காலத்தில் மன்னர்கள் போரிட்டு தங்களது வீரத்தையும் பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். அதற்கு முன்பு கடவுள் வழிபாடு என்பது மிகவும் அவசியமாக இருந்து வந்தது. அந்த காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் எதிரி நாடுகளாக மற்றும் மன்னர்களாக இருந்த போதிலும் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
அதன் அடிப்படையிலேயே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வரலாற்றுச் சரித்திர குறியீடாக அசைக்க முடியாமல் கம்பீரமாக நின்று வருகின்றன.
சோழர் சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கம்பீரத்தின் உச்சமாக திகழ்ந்து வருகிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயில் உலக ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அப்படிப்பட்ட பிரம்மாண்ட கோயில்களில் மூலவராக வீற்றிருக்க கூடியவர் சிவபெருமான். சிவபெருமானின் மீது கொண்ட பக்தியை உணர்த்துவதற்காகவும் அவர் எவ்வளவு உயர்வானவர் என்பதை காட்டுவதற்காகவே இவ்வளவு பெரிய அளவில் தங்கள் பக்தியை கோயிலாக மன்னர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் யார் யார் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் ஒரு புனித பூமியாக இந்த கோயில்கள் மாற்றியுள்ளன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரையூர் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகநாதர் எனவும் தாயார் பிரகதாம்பாள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு கொடியேற்று விழா நடத்தப்படுகிறது. மேலும் பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் இங்கு வீற்றிருக்கக்கூடிய நாகருக்கு கொடியேற்றி விழா நடத்தப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார்.
இந்த கோயிலில் ஒரு அதிசயம் என்னவென்றால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சுனையில் நீர்மட்டம் குறையும் பொழுது பக்கவாட்டு சுவரில் திரிசூலம் குறி ஒன்று காணப்படுகிறது. அந்த திரிசூலத்தின் சரி மட்டத்தில் நீர் அமைந்திருக்கும் போது குறிப்பாக பங்குனி மாதம் மீன லக்னத்தில் ஒரு சத்தம் கேட்கின்றது. மற்ற நாட்களில் சரி மட்டத்தில் இருந்தாலும் அப்படி சத்தம் கேட்பது கிடையாது. அது என்ன அதிசயம் என்று இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்க வீட்டில் இருக்கக்கூடிய நாகநாதருக்கு பாலாபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
தல வரலாறு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை நாகராஜன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இது நாகராஜன் கோயில் என்கின்ற காரணத்தினால் இங்கு வீச்சி இருக்கக்கூடிய இறைவனை நாகநாதன் என அழைக்கின்றனர். நாகநாதருக்கு பாலபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
பல அபிஷேகம் செய்யும் நேரத்தில் அந்த பால் அவரது உடலில் பட்டவுடன் அது நீல நிறமாக மாறுவது மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. கிரத யுகத்தில் பிரம்ம தேவர் அனைத்து புண்ணிய நதிகளையும் ஒன்று சேர்த்து ஒரு குளத்தை அமைத்து சிவபெருமானை வைத்து இங்கு வழிபட்டுள்ளார்.
நாகத்தினால் சூரிய பகவான் தனது ஒளியை இழந்தார். இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் சூரிய பகவான் பெற்றுள்ளார். இங்கு வீழ்ச்சி இருக்கக்கூடிய நாகநாதரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மேலும் நாக தோஷம் விலகும் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது.