கதி கலங்க போகும் ராசிகள்.. தலைகீழாக அடி தரும் செவ்வாய்.. தப்பிக்க முடியாத ராசிகள் நீங்களா?
May 11, 2024, 03:08 PM IST
Lord Mars: செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகளும் நுழைந்தார். இவருடைய விடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமத்தை சந்திக்க போகின்றனர்.
நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகளும் நுழைந்தார். இவருடைய விடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் வரப்போகின்றது. பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் அவ்வப்போது லாபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கண் மற்றும் பல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு சொற்களை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. உடன் வேலை செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
புதிய தொழில் தொடங்க நினைத்தால் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையில்லாத இழப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். உடல் ரீதியாக மிகவும் மந்தமான நிலை ஏற்படும்.
மகர ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பல தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்மறை எண்ணங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாய்ப்புகள் மற்றும் வசதிகள் குறைவாக வரக்கூடும். சிறிய வேலையாக இருந்தாலும் மிகவும் கஷ்டமாக இருக்கும்.
வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகளை சந்திக்க நீங்கள் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு பெரிய பலன்களை பெற்றுத் தராது. பல்வேறு விதமான நஷ்டங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9