தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  30 ஆண்டு.. சனியோடு சேரும் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு கஷ்டம்

30 ஆண்டு.. சனியோடு சேரும் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு கஷ்டம்

Feb 23, 2024, 05:45 PM IST

google News
Saturn and Mars: சனியும் செவ்வாயும் சேர்ந்து கஷ்டப்படுத்த போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.
Saturn and Mars: சனியும் செவ்வாயும் சேர்ந்து கஷ்டப்படுத்த போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

Saturn and Mars: சனியும் செவ்வாயும் சேர்ந்து கஷ்டப்படுத்த போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

நவகிரகங்களின் நீதிமானாக அழைக்கப்படக்கூடிய சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். கடின உழைப்புக்கு நல்ல பலன்களை செய்யக்கூடியவர். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் இவருடைய இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் செவ்வாய் பகவான் மார்ச் மாதம் நுழைகின்றார். இதனால் சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது.

சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. மிக நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் எந்த வித மாற்றமும் இருக்காது. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. புதிய முதலீடுகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

மீன ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் நீங்கள் பல அவதூறுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொல்லையால் அவதிப்பட வேண்டி இருக்கும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வணிகத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

அடுத்த செய்தி