சனி தலையில் எழுதிவிட்டார்.. பின்னோக்கிய பயணத்தால் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் அமைதியாக அமரப்போகும் ராசிகள்
Apr 19, 2024, 05:23 PM IST
Saturns transit: சனி பகவான் கும்ப ராசியில் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்வார். இது ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சமீபத்திய புகைப்படம்
கடந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கும்ப ராசி சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்வார். இது ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி
உங்கள் ராசியில் சனி பகவான் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. பேச்சுத் திறமையால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வணிகப் பயன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கிக்கிடந்த படங்கள் உங்களை தேடி வரும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. ஜூன் மாதத்தில் இருந்து பணம் பணமழை கொட்ட போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். மாணவராக இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9