தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: 3-வது அடிக்கு இடம் கேட்ட வாமனன் - பாசத்திலேயே காரியத்தை சாதித்த மகாவிஷ்ணு

HT Yatra: 3-வது அடிக்கு இடம் கேட்ட வாமனன் - பாசத்திலேயே காரியத்தை சாதித்த மகாவிஷ்ணு

Dec 22, 2023, 07:00 AM IST

google News
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

பெருமாளின் பத்து அவதாரங்களில் ஐந்தாவதாக எடுக்கப்பட்ட அவதாரம் தான் வாமன அவதாரம். குள்ள உருவத்தில் அந்தணராக பிறந்த பெருமாள் தனது காலடியால் மூன்று லோகத்தையும் அளந்தார். பிரகலாதனின் பேரனாகிய மகாபலி என்ற அசுரனின் காலத்தில் எடுக்கப்பட்டதுதான் இந்த வாமன அவதாரம்.

சமீபத்திய புகைப்படம்

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

இந்திரனோடு போரிட்ட பலி, தோற்றுப் போய் மீண்டும் ஜெயிப்பதற்காக மிகப்பெரிய வேள்வியை நடத்தி பல வரங்களைப் பெற்றான். இவனது பராக்கிரமத்தைக் கண்ட இந்திரன் குரு பகவானுடன் ஆலோசனை செய்து அசுரர்கள் காண முடியாத இடத்திற்கு சென்று மறைந்து கொண்டான்.

அதற்குப் பிறகு இந்திரலோகத்தை கைப்பற்றி சொர்க்கத்தை மகாபலி கட்டி ஆண்டான். இந்திரலோகத்தில் ஆட்சி செய்த மகாபலி அனைவரும் புகழும்படி தனது பணியை செய்தான். மகரிஷிகளின் ஆலோசனைப்படி இந்த பதவியில் இருந்து விலகாமல் இருப்பதற்கு அஸ்வமேத யாகம் செய்தான் இதனால் மூவுலகிலும் இவனுடைய புகழ் பரவியது.

கச்யபர் முனிவருக்கும் அதிதி என்பவருக்கும் பிறந்தவர்கள் தேவர்கள். தேவர்கள் இந்திரலோகத்தை ஆளவில்லை என்ற மன வருத்தம் அதிதி தேவிக்கு இருந்து வந்தது. இது குறித்து தனது கணவரிடம் அவர் தெரிவித்தார். நீ மகாவிஷ்ணுவை வழிபடு உனக்கு விடை கிடைக்கும் என அவர் கூறினார்.

முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் சுக்லபட்சம் பிரதமை திதி நாளில் பயோ விரதம் என்ற விரதத்தை பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்தி அதிதி வழிபாடு செய்தார். விரதத்தில் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு அதிதிக்கு காட்சி கொடுத்தார்.

மேலும் விஷ்ணு பகவான் உமது விரதம் கண்டு நான் மகிழ்ந்தேன். உன் விரதம் குறித்து நான் அறிவேன். தேவலோகத்தை உன் மகன் தேவேந்திரன் மீண்டும் ஆள வேண்டும் என ஆசைப்படுகிறாய் தற்போது அசுரர்கள் அதிக பராக்கிரமம் கொண்டு செயல்படுகிறார்கள். அதற்கான காலம் வரும்போது நானே செய்து கொடுப்பேன். மேலும் உனக்கு மகனாக பிறந்து அதனை செய்து கொடுப்பேன். இது தேவ ரகசியம் யாரிடமும் கூறக்கூடாது என மகாவிஷ்ணு வரத்தை கொடுத்தார்.

பின்னர் அதிதித்திக்கு புரட்டாசி மாதம் சுக்கிர பட்சம் திருவோண நட்சத்திரத்தில் புத்திரராக மகாவிஷ்ணு வந்து பிறந்தார். பிறக்கும் பொழுதே திரு அலங்காரத்துடன் காட்சி கொடுத்தார் மகாவிஷ்ணு. அதன் பின்னர் குட்டையான அந்தணர் உருவம் கொண்ட குழந்தையாக மாறிவிட்டார். பல மகரிஷிகள் சேர்ந்து அவருக்கு வாமனன் என்று பெயர் வைத்தனர்.

மகாபலி சக்கரவர்த்தி நர்மதா நதி கரையில் பெரிய யாகசாலை அமைத்து வேள்விக்கு மகரிஷிகளை அழைத்தார். அனைத்து வித்தைகளையும் கற்றுத் தெரிந்த வாமனரும் மகரிஷிகளோடு சேர்ந்து யாகசாலைக்கு சென்றார். யாகசாலைக்கு வந்த வாமனரை மகாபலி சக்கரவர்த்தி அன்போடு வரவேற்றார்.

யாகசாலைக்கு வந்த வாமனரிடம் தங்கள் வந்தது எனக்கு மிகப்பெரிய புண்ணியம், எனது பாவங்கள் அனைத்தும் போய்விட்டன. தங்களுக்கு ஏதேனும் தர வேண்டும் என்றால் நீங்கள் அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என மகாபலி கூறினான்.

அதற்கு வாமனர், உனக்கு எந்த குறையும் கிடையாது எது கேட்டாலும் இல்லை என்று கொடுக்கக் கூடியவர் நீர். கொடுப்பதாக கூறிவிட்டு பின்னால் வாக்கு தவறக்கூடாது என கூறினார். மேலும் நான் விரும்புவது எனது கால் அடியினால் மூன்றடி நிலம் மட்டுமே அதற்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம் என வாமனர், பலி சக்கரவர்த்தியிடம் கூறினார்.

நான் உங்களுக்கு பூத்துக்குலுங்கும் மிகப்பெரிய நிலத்தை தருகிறேன் என பலிச் சக்கரவர்த்தி கூறினார். உனது வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் எனக்கு மூன்றடி நிலம் மட்டும் போதும் வேறு ஏதும் தேவையில்லை என வாமனர் கூறினார்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த பலியின் ஆசான் சுக்ராச்சாரியார் பலிச்சக்கரவர்த்தியை தனியே அழைத்து, வந்திருப்பது மகாவிஷ்ணு, அவர் தேவர்களை காப்பதற்காக வந்திருக்கிறார் அவசரப்படாமல் வாக்குறுதியை நிறைவேற்று என கூறினார்.

மகாவிஷ்ணுவே என்னிடம் வரம் கேட்டு வந்திருக்கிறார் என்றால் அது எனக்கு பெருமை தான். நான் வாக்கு தவறினால் என்னுடைய பாட்டன் பிரகலாதனின் பெயர் என்னவாகும். வாக்கு தவறிவிட்டான் என்று அவ பெயரை நான் வாங்க விரும்பவில்லை, மன்னித்து விடுங்கள் நான் சொன்னதை செய்வேன் எனக் கூறினார் பலி சக்கரவர்த்தி.

கிண்டிச் செம்பிலிருந்து நீரை கொடுத்து தனது மனைவியோடு மகாபலி சக்கரவர்த்தி வரத்தை தாரை வார்த்து கொடுத்தான். அந்தணர் குல நாயகனே உனக்கு மூன்று அடிகளையும் நான் தானம் செய்கிறேன் என கூறினான். தனது இருக்கையில் இருந்து எழுந்த வாமனர் பறந்து விரிந்து வானளாவி தனது உருவத்தை பெரிதாக்கினார்.

தனது ஒரு காலால் பூமியை அளந்தார், தனது மற்றொரு காலால் வானத்தை அளந்தார். இருப்பினும் ஆகாயம் போதவில்லை மூன்றாவது அடிக்கு இடம் இல்லை. உனது வாக்குறுதி படி மூன்றாவது அடிக்கு இடம் இல்லையே வாக்குறுதி தவறினால் நரகம் போக வேண்டி இருக்கும் என்பதை நீ அறிவாய், அதற்காக நீ என்ன தரப் போகிறாய்? என வாமனன் பலி சக்கரவர்த்தியிடம் கேட்டார்.

நான் எனது வாக்குறுதியை மீறமாட்டேன். மூன்றாவது அடிக்கு தங்களுக்கு இடம் வேண்டும் அல்லவா, எனது தலையின் மீது உங்களது காலடியை வைத்துக் கொள்ளுங்கள். எந்த விளைவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என பலி கூறினார். உடனே பலியின் பாட்டன் பக்த பிரகலாதன் அங்கே வந்தார். வர்ண பாசத்தில் இருந்த மகாபலி வணங்க முடியாமல் வாமனன் பாதத்திற்கு கீழே அமர்ந்திருந்தார்.

பிரகலாதனும், பிரம்மதேவரும் சேர்ந்து மகாபலிக்கு அனுகிரகத்தை தந்துள்ள வேண்டும் என கூறினார்கள். உடனே வாமனர் யாருக்கு நான் அருள் வழங்க விரும்புகிறேனோ அவர்களிடம் அனைத்து செல்வத்தையும் பறித்து விடுவேன். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு தலைகனம் அதிகமாகிவிடும். என்னை சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை. தனது குருவான சுக்கிராச்சாரியார் கூறியும் வாக்குறுதியை தவற மாட்டேன் என உறுதியை கைவிடாமல் மகாபலி நின்றான்.

யாரும் பெற முடியாத அனுக்கிரகத்தை மகாபலி அடைந்து விட்டான். எனவே அடுத்து வரக்கூடிய சாகரணி மனு மந்திரத்திலே மகாபலி இந்திரனாக இருக்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்ணயிக்கப்பட்ட சுதல லோகத்தில் மகாபலி இருக்கட்டும் எனக் கூறினார். அதன் பின்னர் வருண பாசத்தில் கட்டுப்பட்டிருந்த மகாபலியை வாமனன் விடுவித்தார். அதன் பின்னர் மகாபலி தனது பாட்டன் பிரகலாதனோடு சுதல லோகத்திற்குச் சென்றார்.

அதற்குப் பிறகு வாமன மூர்த்தி மகாபலி இடம் இருந்து பெற்ற மூன்று லோகத்தையும் தேவேந்திரனிடம் ஒப்படைத்து விட்டார். வாமனமூர்த்தியை வழிபட்டால் அனைத்து சிக்கல்களும் தீரும் என நம்பப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி