சிம்ம ராசிக்காரர்களா நீங்கள்.. 2025 புத்தாண்டு சிம்ம ராசி பலன்..இந்த 2025 புத்தாண்டு எப்படி மாறப்போகுது.. பாக்கலாமா?
Dec 10, 2024, 10:38 AM IST
New Year 2025: சிம்ம ராசிக்காரர்களா நீங்கள்.. 2025 புத்தாண்டு சிம்ம ராசி பலன்..இந்த 2025 புத்தாண்டு எப்படி மாறப்போகுது.. பாக்கலாமா?
New Year 2025: புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் இன்பம் தான். என்னதான் கடந்த காலம் நமக்கு சிறப்பாக இருந்தாலும் வரும் ஆண்டு எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் இங்கு ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு குறித்து பல எதிர்பார்ப்புகள் பலருக்கும் இருக்கின்றன.
சமீபத்திய புகைப்படம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் அமைப்புகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டில் பல பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். ராகு, சனி, குரு, கேது உள்ளிட்டவைகள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள்.
இந்த மாற்றங்களால் 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கக்கூடும். இருப்பினும். இந்த 2025 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்கள் பெறுகின்ற பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
கல்வி பலன்கள்
சிம்ம ராசி பொருத்தவரை இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். விடுமுறை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது. படிப்பு விஷயங்களில் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால் உங்களுக்கு நன்மை நடக்கும். குரு பகவானின் ஆசி உங்கள் மீது இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்.
நிதி நிலைமை
இந்த 2025 ஆம் ஆண்டு பொருத்தவரை உங்களுக்கு பொருளாதாரத்தில் கலவையான சூழ்நிலை இருக்கக்கூடும். குரு பகவானின் பார்வை விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் சில நேரங்களில் லாபத்தை அதிகரிக்கும். வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும் பண வரவை அதிகப்படுத்துவது முக்கியமல்ல, அதனை சேமிப்பது மிகவும் முக்கியமாகும். குரு பகவானின் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சனி மற்றும் ராகு இருவரும் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வேலை
2025 ஆம் ஆண்டு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். தடைபட்ட கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும் சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இருப்பிடம் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
குடும்பம்
இந்த 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடும். குருபகவானின் தாக்கம் இருக்கின்ற காரணத்தினால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்ப உறவுகளிடம் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். கணவன் மனைவிக்கிடையே சிறப்பான முன்னேற்றம் இருக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய விஷயங்களை செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.