3 Super Zodiac: போச்சு போங்க.. சுழற்சியை சுக்கிரன் மீது ஏறிய கேது.. 3 ராசிகள் மீது உச்சக்கட்டம்.. பணம் கொட்டுமாம்
Aug 14, 2024, 12:09 PM IST
Venus and Ketu: கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை தருகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Venus and Ketu: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு மாதத்திற்கு ஒருமுறை சுக்கிர பகவான் தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் கேது பகவான் பயணம் செய்வார்.
அந்த வகையில் சுக்கிர பகவான் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைகின்றார். இதனால் கன்னி ராசியில் ஏற்கனவே பயணம் செய்யும் கேது பகவானுடன் சுக்கிர பகவான் இணைகின்றார். கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை தருகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தனிப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வருமானம் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்கள் பெற்று தரும் வாழ்க்கையில் உங்களுக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும். உயர்கல்வியில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்க நிகழ்கின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9