Lucky Rasis: இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கிவிட்டது.. ஆகஸ்ட் 26 முதல் செவ்வாய் கொட்டும் ராசிகள் நீங்கதான்
Aug 03, 2024, 05:06 PM IST
Lucky Rasis:செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவானின் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
Lucky Rasis: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு பயணிக்க போகின்றார். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவானின் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
ரிஷப ராசி
செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வரப் போகின்ற ஆண்டில் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான நல்ல மாற்றங்கள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. லட்சுமிதேவியின் அருளால் உங்களுக்கு ஏராளமான செல்வம் மற்றும் செழிப்பு கிடைக்கக்கூடும்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். இந்த ஆண்டில் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து புதிய சாதனைகள் உருவாக கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெரிய நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து உங்களுக்கு ஏற்றவாறு அனைத்தும் நடக்கும். சனி பகவானின் இயக்கம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பண வரவில்லை இந்த குறையும் இருக்காது.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் கிடந்த பணம் அனைத்தும் உங்களைத் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு வருமானத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கும். செவ்வாய் பகவானால் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். விரும்பிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கனவுகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்தார். சிக்கல்கள் அனைத்தும் குறைந்து வளர்ச்சி ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9