Mercury Luck: புதனின் வக்ரப் பெயர்ச்சி.. ராஜயோகம் பெறும் ராசிகள்
Aug 31, 2023, 03:46 PM IST
புதன் வக்ரப் பெயர்ச்சியால் யோகம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
கல்விக்கு அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் அவ்வப்போது உதயம், அஸ்தமனம், வக்ரம், வக்ர நிவர்த்தி உள்ளிட்ட பயணங்களில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
அப்போது 12 ராசிகளுக்கும் கிரகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று புதன் பகவான் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். செப்டம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்யப் போகிறார். புதன் பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசி
புதன் பகவானின் வக்ர பயணத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. புதிய சொத்துக்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி
புதன் பகவானின் வக்ர சஞ்சாரத்தால் பல்வேறு விதமான ஆதாயங்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களது அந்தஸ்த்து அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இது உங்களுக்கு சாதகமான காலமாக மாறும்.
மிதுன ராசி
புதன் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்க கூடியவர். புதனின் பயணத்தால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தரும்.
துலாம் ராசி
புதன் பகவான் உங்கள் ராசிக்கு நன்மைகளை கொட்டிக் கொடுக்கப் போகிறார். மாணவர்களுக்கு இது சிறந்த காலமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திட்டம் போட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும்.
கன்னி ராசி
புதன் பகவானின் வக்ர பயணத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். புதிதாக நகைகள் மற்றும் வீடு வாங்க அதிக வாய்ப்புள்ளது.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்