தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கூப்பிட்டாலே வருவார்.. இனி இந்த ராசிகள் தாறுமாறு தக்காளி சோறு.. இனிமே மாடி வீட்டு தான்

குரு கூப்பிட்டாலே வருவார்.. இனி இந்த ராசிகள் தாறுமாறு தக்காளி சோறு.. இனிமே மாடி வீட்டு தான்

Nov 09, 2024, 02:58 PM IST

google News
Guru Bhagavan: குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை ஒரு சில ராசிகள் யோகத்தில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagavan: குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை ஒரு சில ராசிகள் யோகத்தில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை ஒரு சில ராசிகள் யோகத்தில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள சபைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

சமீபத்திய புகைப்படம்

‘காத்திருப்பு வீண் போகாது.. காலம் வாசல் வரும்.. நம்பிக்கை நல்லது’ இன்று நவ.15 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 15, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. சனி குறி வச்சுட்டார்.. உங்களுக்கு நல்லதா.. கெட்டதா!

Nov 14, 2024 07:42 PM

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், கன்னி ராசியினரே சனி பகவான் குறி வச்சுட்டார்.. யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்!

Nov 14, 2024 07:32 PM

குரு கோடிகளை கொட்ட போகிறார்.. பண ஊஞ்சலில் ஆடும் ராசிகள்.. வருகிறது அதிர்ஷ்டமான யோகம்..!

Nov 14, 2024 05:53 PM

நாளை வக்ர நிவர்த்தி பெறும் சனி! செம்ம அடி வாங்க போகும் 3 ராசிகள்! சிம்மம், விருச்சிகம், மகரத்திற்கு தலைவலி உறுதி!

Nov 14, 2024 03:46 PM

3 ராசிகள் மீது குறி.. கோடி கோடியாய் கொட்டும் புதன்.. அழியா புகழ் பெறும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Nov 14, 2024 03:34 PM

குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். அதுவரை ஒரு சில ராசிகள் யோகத்தில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குருபகவான் வக்கிரநிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செயல் திறன் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தேடி தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனிதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும் வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும். நிறைவேறும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை