இது குரு தீபாவளி.. வேலைய தொடங்கிட்டார்.. இந்த ராசிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!
Oct 31, 2024, 08:47 AM IST
Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர நிலை 119 நாட்கள் நடைபெறும். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
இந்நிலையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை மாற்றினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் குரு பகவானில் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். குரு பகவானின் வக்கிர நிலை 119 நாட்கள் நடைபெறும். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் வக்கிரனில் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு 119 நாட்கள் சிறப்பான நாட்களாக அமையும் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அனைத்து வெற்றுக்களும் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட கால பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் வக்கிரநிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பெரிய அளவில் உயர்வு கிடைக்கும். சிலர் புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை பெருக்குவார்கள். நிதி நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
நீண்ட தூர பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கேட்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு குறையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.