தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி பறந்து வருகிறார்.. உதயத்தில் கிடைத்துள்ளது யோகம்.. பண மழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Sani: சனி பறந்து வருகிறார்.. உதயத்தில் கிடைத்துள்ளது யோகம்.. பண மழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Mar 12, 2024, 09:47 AM IST

google News
Sani transit: தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயம் ஆகின்றார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தின் உச்சத்தை அடையப்போகின்றனர்.
Sani transit: தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயம் ஆகின்றார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தின் உச்சத்தை அடையப்போகின்றனர்.

Sani transit: தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயம் ஆகின்றார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தின் உச்சத்தை அடையப்போகின்றனர்.

நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

நன்மைகள் மற்றும் தீமைகள் இவை அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக அதற்கான பலன்களை திருப்பிக் கொடுப்பார். நவகிரங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயம் ஆகின்றார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தின் உச்சத்தை அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சனிபகவானால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

 

சனிபகவான் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி