Margazhi Month: இறைவனின் மாதம் இந்த மார்கழி.. இதன் சிறப்புகள் என்னென்ன?
Dec 17, 2023, 07:30 AM IST
மார்கழி மாதத்தின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் இறைவனுடைய மாதமாக கருதப்படுகிறது. தெற்கு பக்கம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற சூரியனின் காலம் முடிவடைவதே மார்கழி மாதத்தின் தொடக்கமாகும். கடவுளை வழிபடுவதற்காகவே ஒரு மாதம் இருக்கிறது என்றால் அது மார்கழி மாதம் தான்.
சமீபத்திய புகைப்படம்
எந்தவிதமான மங்கள நிகழ்சிகளும் இந்த மாதத்தில் நடத்தப்படுவது கிடையாது. இறைவனை வழிபடுவது மட்டும்தான் இந்த மாதத்தில் முக்கிய வேலையாகும். சைவம் மற்றும் வைணவ கோயில்களில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பூஜை மற்றும் வழிபாடுகள் இந்த மாதத்தில் தொடங்கிவிடும்.
சிவபெருமான் கோயில்களில் திருவெம்பாவையும், மகாவிஷ்ணு கோயில்களில் திருப்பாவையும் பாடப்படும். இந்த மார்கழி மாதம் முழுவதும் மகாவிஷ்ணு கோயில்களில் திருப்பாவை பாடப்படும். மனிதர்களின் கணக்கில் ஒரு வருடம் என்றால் அது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். மாதங்களில் நான் மார்கழி என விஷ்ணு பகவான் கூறியதாக நம்பப்படுகிறது.
தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை பகல் காலமாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவு காலமாகவும் தேவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். இந்த மார்கழி மாதமானது தேவர்களுக்கு அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். அதன் காரணமாகவே சூரிய உதயத்திற்கு முன்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு இறைவனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் வேண்டிய பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் வருமாம் அதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலம் இட்டு வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
மகாவிஷ்ணுவின் சொர்க்கவாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசி திருநாள் இந்த மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை கடையும் பொழுது முதலில் விஷம் வந்துள்ளது அதனை சிவபெருமான் உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றினார். அந்த நிகழ்வு இந்த மார்கழி மாதத்தில் தான் நிகழ்ந்தது.
இந்த மார்கழி மாதத்தில் தான் சிவனுக்கு உரிய திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது இந்த திருநாளில் பக்தர்கள் நோன்பு இருந்து தனக்கு உரிய கணவர் வரவேண்டும் என்பதற்காக வேண்டி கொள்வார்கள் அப்படி சிவனுக்காக வழிபாடு செய்யும் திருவெம்பாவை பாவை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒரு முறை மார்கழி மாதத்தில் இந்திரன் பெருமலையை உருவாக்கி வெள்ளக்காரடாக மாற்றினார். அப்போது கோவர்த்தன கிரி மலையை கிருஷ்ணா பரமாத்மா எடுத்து வந்து குடையாக பிடித்து மக்களை காப்பாற்றினார் என புராணங்களில் கூறப்படுகிறது. அப்படி சிறப்பு மிகுந்த இறைவனின் மாதமாக மார்கழி மாதம் திகழ்ந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9