தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Udayam: உதயமாகிவிட்டார் குரு.. ஜூன் மாதத்தில் இருந்து பணம் கொட்டும்.. யோக ராசிகள் நீங்கள் தான்

Lord Guru Udayam: உதயமாகிவிட்டார் குரு.. ஜூன் மாதத்தில் இருந்து பணம் கொட்டும்.. யோக ராசிகள் நீங்கள் தான்

May 31, 2024, 03:31 PM IST

google News
Lord Guru Udayam: ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது.
Lord Guru Udayam: ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது.

Lord Guru Udayam: ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது.

Lord Guru Udayam: நவகிரகங்களில் மங்கள கிரக மாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் யோகத்தை கொட்டிக் கொடுக்கக் கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சமீபத்திய புகைப்படம்

விசாக நட்சத்திரம்.. சுக்கிரனின் அதிர்ஷ்டத்தில் குதிக்கும் 3 ராசிகள்.. பணத்தோடு விளையாட்டு ஆரம்பம்

Nov 16, 2024 03:10 PM

சனி 3 ராசிகள் உள்ளே கால் வைத்தார்.. சங்கடங்கள் தீரும்.. இனி இந்த ராசிகள்.. தொட முடியாது ராஜா!

Nov 16, 2024 03:00 PM

செவ்வாய் பட்டாபிஷேகம் தொடக்கம்.. தலைகளாக பிடித்து வாழும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் ஓடி வருகிறது..!

Nov 16, 2024 02:27 PM

கடகம், சிம்மம், மீனம் ராசியினரே.. சனி பகவானின் கோபம் சுட்டெரிக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

Nov 16, 2024 01:19 PM

சனி சட்டென்று அடித்தார்.. பட்டென்று புகுந்த ராகு.. இனி இந்த ராசிகள்.. கவலை வேண்டாம்.. உச்சம் தொடுவது உறுதி!

Nov 16, 2024 10:21 AM

மிதுனத்தில் புகுந்து துலாமில் வெளிவரும் கேது.. 2 ராசிகள்.. இனி அசைக்க முடியாத பணமழை.. 2025 முதல் யோகம்

Nov 16, 2024 09:56 AM

நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக விளங்கி வருகிறார். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் ஒருவராக விளங்கக்கூடிய குருபகவானின் இடமாற்றம்தான் வெகு விமர்சையாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது. குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு உள்ளிட்டவைகள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை