சனி கும்பத்தில் வக்ர அடி.. 5 மாதம் 3 ராசிகளுக்கு போராட்ட வாழ்க்கை.. என்ன செய்தால் தப்பிக்கலாம்.. வாய்ப்பு இருக்கா?
Apr 26, 2024, 02:56 PM IST
Saturn transit: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். கர்மநாயகனாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகின்றார். இதனால் உங்களுக்கு அவ்வளவு சிறப்பான பலன்கள் அமையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடும். மன விரக்தி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஜூன் மாதம் முதல் அடுத்த ஐந்து மாதத்திற்கு நீங்கள் நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகளை எல்லாம் பெற்று தராது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் கோபம் கொண்ட பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தின் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அமைதியாக இருந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் இந்த காலம் உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்காது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய வருமானத்திற்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். பண சிக்கல்களில் நீங்கள் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9