HT Yatra: சிவனை மார்பில் பூசித்த விஷ்ணு.. பூமியின் தலம் தியாகராஜர் கோயில்
Jan 12, 2024, 06:30 AM IST
திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை உலகம் முழுவதும் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இந்தியாவின் தென்பகுதியில் சிவபெருமானுக்கு ஏராளமான பக்தர்கள் கூட்டம் உள்ளன. வரலாற்றை எடுத்துரைக்கக்கூடிய எத்தனையோ மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டு இன்றுவரை வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்திய புகைப்படம்
அந்த வகையில் மிகவும் பழமையான கோயிலாக பிரம்மாண்டமாக விளங்கி வரக்கூடிய திருத்தலம் தான் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில். இந்த திருக்கோயில் சைவ மரபில் பெரிய கோயில் என அழைக்கப்படுகிறது.
இந்த திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் பூமியின் தளமாக போற்றப்பட்டு வருகிறது உலகிலேயே மிகப்பெரிய தேர் இந்த திருக்கோயிலில் உள்ளது. காவிரி தென்கரைகளில் அமைந்துள்ள சிவபெருமான் தலங்களில் இது 87 வது திருத்தலமாக அமைந்துள்ளது. தேவார பாடல்களில் இடம் பெற்ற திருத்தலமாக இது விளங்கி வருகிறது.
தல வரலாறு
விஷ்ணு பகவானுக்கும் லட்சுமி தாயாருக்கும் பிள்ளை பேரு பெற வேண்டி சிவபெருமான் தியாகராஜனாக தனது திருமேனியை கொடுத்தார். திருப்பாற்கடலில் விஷ்ணு பகவான் தியாகராஜராக விளங்கக்கூடிய சிவபெருமானை தனது மார்பில் வைத்து பூஜை செய்தார்.
திருமால் மூச்சு விடும் பொழுது மார்பில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இசைவுக்கு ஏற்ப சிவபெருமான் நடனம் ஆடியுள்ளார். அதற்குப் பிறகு இந்திரன் அதனை வரமாக பெற்று பூஜை செய்து வந்துள்ளார். இந்திரனிடம் வரமாக முசுபுந்த சக்கரவர்த்தி பெற்றுள்ளார்.
அதற்குப் பிறகு பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தளமாக திருவாரூரில் திருக்கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறார் தியாகராஜர். இந்த கோயில் பல்வேறு விதமான சிறப்புகளை பெற்று இன்று வரை வரலாற்றின் குறியீடாக விளங்கி வருகிறது.
சிதம்பரத்தில் வீழ்ச்சி இருக்கக்கூடிய நடராஜர் கோயிலை விட இந்த திருக்கோயில் மிகவும் பழமையானது என தேவாரத்தில் திருச்சிற்றம்பலத்தில் பாடப் பெற்றுள்ளது. சங்கீத மூர்த்திகள் தோன்றிய தலமாகவும், சிவபெருமான் வீதியில் நடந்து சென்ற தலமாகவும், நால்வரில் ஒருவரான சுந்தரருக்கு சிவபெருமான் இந்த கோயிலில் தனியாக இடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் மக்களுக்கு அருள்பாலித்து வரக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக புற்றிலிருந்து வெளி வந்தார் என கூறப்படுகிறது. இந்த திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 365 சிவலிங்கங்கள் உள்ளன. இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டு இந்த கோயிலில் சிவபெருமானுக்கு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆழித்தேராக விளங்கக்கூடிய திருவாரூர் தேர் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தேராக போற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்த தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தேரின் அழகானது உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேர்த்திருவிழா நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திருவாரூருக்கு பேருந்து வசதி உள்ளது. திருவாரூரில் ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9