HT Yatra: வியர்வை கொட்டும் முருகன்.. சிக்கலை தீர்க்கும் சிங்காரவேலன்
Feb 11, 2024, 06:25 AM IST
சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கு காண்போம்.
மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை உலகம் முழுவதும் வைத்திருக்கக் கூடியவர் முருகப்பெருமான். தமிழ் மக்களின் கடவுளாக விளங்கக்கூடிய இவர் ஆறுபடை வீடு கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அறுபடை வீடு மட்டுமல்லாது பல்வேறு விதமான சிறப்பு கோயில்களில் வீற்றிருந்து உலகம் முழுவதும் அருள் பாலித்து வருகிறார் முருகப்பெருமாள்.
சமீபத்திய புகைப்படம்
அந்த வகையில் முருகப்பெருமானின் கோயில்களில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக விளங்க கூடியது சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயிலாகும். அறுபடை வீட்டிற்கு அடுத்தபடியாக ஏழாம் படை வீடாக இந்த கோயில் திகழ்ந்து வருகின்றது. மற்ற கோயில்களில் இல்லாமல் இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த திருக்கோயிலில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமாள் இருவரும் இருப்பார்கள்.
சிக்கல் என்ற கிராமத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது சிக்கல் நவநீதீஸ்வரர் கோயில் தான் இதன் பெயராகும் அதன் உள்ளே சிங்காரவேலன் திருக்கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு
சிவபெருமானோடு இருக்கக்கூடிய காமதேனு பசு பஞ்சத்தின் காரணமாக ஒரு முறை மாமிசம் சாப்பிட்டு விட்டது இதனால் கோபமடைந்த சிவபெருமான் காமதேனு பசுவிற்கு சாபத்தை கொடுத்தார். சாபத்தினால் மிகவும் கவலையாக இருந்த காமதேனும் இறைவனை வழிபட்டு சாப விமோசனம் கேட்டது.
பூலோகத்தில் இருக்கக்கூடிய மல்லிகை வனம் என்ற இடத்தில் இருக்கக்கூடிய தளத்தில் நீராடி வழிபட்டால் உன்னுடைய சாபம் நீங்கும் என சிவபெருமான் கூறியுள்ளார்.
இறைவனின் வாக்குப்படி மளிகை வனத்தில் இருக்கக்கூடிய தளத்தில் நீராடி காமதேனு பசு தனது சாப விமோசனத்தை பெற்றது. அதற்குப் பிறகு காமதேனு பசுவின் மடியில் இருந்து பால் நிற்காமல் வந்து அந்த குளத்தில் கொட்டியது. அதன் பின்னர் அந்த குளம் புனித குளமாக மாறியது.
காமதேனுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணையை வசிஷ்ட மாமுனி என்பவர் ஒரு சிவலிங்கத்தை செய்தார். வசிஷ்ட மாமணி பூஜையை முடித்துவிட்டு அந்த சிவலிங்கத்தை எடுக்கும் பொழுது அந்த இடத்தை விட்டு வராமல் அங்கேயே சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக அந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என கூறப்படுகிறது.
இந்த தளத்தில் வீச்சி இருக்கக்கூடிய முருகப்பெருமான் அன்னை வேல் நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராணத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா, தாயிடம் இருந்து வேல் வாங்கும் வைபவம் மிகவும் விசேஷமாக நடத்தப்படுகிறது.
சூரபத்மனை அழிப்பதற்காக முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் இந்த இடத்தில் தான் வேல் வாங்கியதாக கூறப்படுகிறது அதன் காரணத்தால் பார்வதி தேவி வேல் நெடுங்கன்னி என அழைக்கப்படுகிறார்.
இந்த திருக்கோயிலில் சூரசம்கார நிகழ்ச்சி நடக்கும் பொழுது பார்வதி தேவியிடம் முருகப்பெருமான் ஒவ்வொரு முறையும் வேல் வாங்கும் பொழுது முருகப்பெருமானுக்கு வியர்வை வருவதை பல பக்தர்கள் கண்டதாக கூறியுள்ளனர்.
இந்த கோயிலில் வீற்றிருக்க கூடிய சிங்காரவேல பெருமாள் தாய் தந்தை இருவருக்கும் நடுவில் அமர்ந்து அருள் பாலித்து வருகின்றார். குழந்தை இல்லாதவர்கள், திருமண பாக்கியம் வேண்டுவோர், சிக்கல்கள் தீர வேண்டுபவர்கள் சிக்கல் சிங்காரவேலனை வழிபட்டால் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது.
வழித்தடம்
இந்த திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் அமைந்துள்ளது. உணவு விடுதிகள், தங்கும் வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவைகள் அனைத்தும் இங்கு உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9