Aadi Pooram: ஆடிப்பூரம் திருநாள் - வரங்களை அள்ளிக் கொடுக்கும் அம்மன்!
Jul 04, 2023, 01:21 PM IST
ஆடிப்பூரத் திருநாளன்று அம்மனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.
தமிழ் மாதங்கள் அனைத்துமே கடவுளுக்குரிய மாதங்களாகும். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்புக் கூடிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுக்க தமிழ்நாடு எங்கும் திருவிழாக் கோலமாக இருக்கும். புரட்டாசி மாதம் எப்படி பெருமாளுக்கு உரியதோ, அதேபோல் இந்த ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம்.
சமீபத்திய புகைப்படம்
தமிழ்நாட்டிற்கு எந்த மூலைக்குச் சென்றாலும், ஏதோ ஒரு இடத்தில் கட்டாயம் அம்மன் பாடல் ஓடிக்கொண்டிருக்கும். தீமிதி திருவிழா, காளியாட்டம், ஆடி மாத கூழ் ஊற்றுதல், எனத் தமிழ்நாடு முழுவதும் திருவிழாக் கோலமாக இருக்கும்.
இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் திருநாள் அம்மனுக்கு மிகவும் விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கு வளைகாப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆடிப்பூரத் திருநாளில் வழிபாட்டு முறைகள் குறித்து இங்குக் காண்போம்.
ஆடிப்பூரத் திருநாளன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். வழிபாடு முடிந்த பிறகு அந்த வளையல்களை வாங்கி திருமணம் ஆன பெண்கள் கையில் அணிந்து கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இந்த திருநாளில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அம்மனுக்குக் காய்கறிகளால் செய்யப்பட்ட கதம்ப சாதம் படைக்கப்படும்.
இந்த திருநாளில் கிராமப்புறங்களில் திறக்கப்படாமல் இருக்கும் கோயில்கள் கூட திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
குறிப்பாகச் சமயபுரம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆடிப்பூரத் திருநாளில் கோயில்களின் எலுமிச்சை பல விளக்கு ஏற்றினால் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக எலுமிச்சை பல விளக்குகளை வீட்டில் ஏற்றுக் கூடாது.
திருவண்ணாமலை கோயிலின் கிரிவலப் பாதை செல்லும் வழியில் ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் பிரம்மாண்டமாகத் தீமிதி திருவிழா நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காகச் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த திருநாளில் காமாட்சி அம்மனை வழிபாடு செய்தால் திருமணத் தடை விலகும் எனக் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி உண்டாகும் என நம்பப்படுகிறது.
முத்துமாரியம்மனை மனதார வேண்டி வழிபாடு செய்தால் திருஷ்டிகள் விலகும்.
இந்த ஆடி மாதத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், மல்லிகைப்பூ அலங்காரத்தில் அம்மன் விசேஷமாகக் காட்சியளிப்பார்.
குற்றாலத்தில் வீற்றிருக்கும் ஈசனை இந்த தினத்தில் அறிவியல் குளித்துவிட்டு வழிபாடு செய்தால் பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்